என்ன செய்வேன்! எப்படி செய்வேன்!! என்று சொல்லுவது திருப்தியற்றவரின் பேச்சு ! நண்பர் 1: திருப்தியற்றவர்கள் கவலையில் மூழ்கி மகிழ்ச்சியற்றும், ஆரோக்கியம் இல்லாமலும்இருப்பார்களா? நண்பர் 2: ஆமாம்! அவர் ஆனந்தமாக இருப்பதற்குப் பதிலாக குழப்பமடைந்து எப்பொழுதும் ‘நான் என்னசெய்வேன்! எப்படிச் செய்வேன்! எனது சூழ்நிலையே அப்படித்தான்! என்னால் முடிந்தது அவ்வளவுதான்!என்னைச் சார்ந்தவர்களின் பழக்கம் அப்படித்தான்! என்ற கேள்விகளை உருவாக்கிக் கொண்டேஇருக்கிறார். இங்கே போ! மனக்குழப்பம் அங்கே போ! (யார் ஒருவர் திருப்தியற்று இருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ள சக்தியை அறியாதவராக இருக்கிறார். அவர்எப்பொழுதும் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு
- Published in Article – By story
குண நலன்கள்
சகிப்புத்தன்மை அனைத்து குணங்களின் மகுடமாகும் தைரியம் அனைத்து குணங்களின் இதயமாகும் உண்மை அனைத்து குணங்களின் அஸ்திவாரமாகும் அன்பு அனைத்து குணங்களின் அரசியாகும் அமைதி அனைத்து குணங்களின் அரசனாகும் மன உறுதி அனைத்து குணங்களையும் கொண்டு வருவதாகும் நேர்மை அனைத்து குணங்களின் குருவாகும் மலர்ந்தமுகம் அனைத்து குணங்களின் சான்றாகும் எளிமை அனைத்து குணங்களின் அழகாகும் இனிமை அனைத்து குணங்களின் நறுமணமாகும் திருப்தி அனைத்து குணங்களின் சொரூபமாகும் உள்நோக்குமுகம் அனைத்து குணங்களின் திறவுகோலாகும் தூய்மை அனைத்து குணங்களின் தாயாகும் பொறுமை
- Published in Article – By Points
இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் !
பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி பெண்கள் சிலர் பக்தி தொடர்பான புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது இந்த வரியைக் கண்டனர். ‘இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் போன்று அமர்ந்திருப்பார்’ என்று இந்த வரியைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்துக்குள்ளாயினர். பிறகு ஒரு பெண் ஒரு நகை ஆசாரியை அழைத்து அவர் எவ்வாறு தங்கத்தை புடம் போடுகிறார் என்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். பின்பு அந்தக் காரியத்தை கவனமாகப் பார்த்தார். ஆனால் அந்த நகை ஆசாரியிடம் தான் படித்த விடயத்தையைப் பற்றி எதுவும் கூறவில்லை.
- Published in Article – By story
எல்லைக்கப்பாற்பட்ட பரிசு
பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி ஒரு நாள் ஒரு சிறுவன் தன் தாயோடு கடைக்குச் சென்றான். அப்போது அந்த அழகான சுட்டி சிறுவனைப் பார்த்துஅந்தக் கடைக்காரர் “உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மிட்டாய்களை எடுத்துக்கொள் என்று அன்பாகக் கூறினார்”. ஆனால் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை. ஆச்சரியமடைந்தக் கடைக்காரர் மறுபடியும் மிட்டாய் பெட்டியைத்திறந்து காட்டி ‘இந்தா மிட்டாய் எடுத்துக்கொள்’ என்று கூறினார். ஆப்பொழுதும் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை. இந்த முறை அந்த சிறுவனின் தாய் அதைக் கவனித்துவிட்டு
- Published in Article – By story
நினைவில் கொள்ளவேண்டியவை !
மகிழ்ச்சியைப் போன்றதொரு நல்ல உணவும் இல்லை மற்றும் கவலையைப் போன்றதொரு மோசமான பிணியும் இல்லை. நீங்கள் எந்தஅளவு அதிகமாக கடவுள் மீது அன்பு செலுத்துவீர்களோ, அந்தஅளவு அவர் உங்களுடைய ஆதரவாக இருப்பார். இலட்சியமற்ற வாழ்க்கை என்பது மதிப்பற்ற வாழ்க்கை ஆகும் . தனது வீண் எண்ணங்களை நிறுத்தத் தெரிந்தவரால் பிறரது எண்ணங்களை அறிய இயலும். தன்னுடைய புலன்களை அடக்கி ஆள்பவரே உண்மையான அரசன். உயர்வான செயல்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பானதாக ஆக்குகிறது. சத்தியத்தை நேசிப்பவர்கள் கடவுளால்
- Published in Article – By Points
மறதி விளையாட்டு
பி.கு. செண்பகராஜ், மதுரை மனித வாழ்க்கையில் மறதி என்பது தேவையா? அல்லது தேவையில்லையா? நமது நினைவுகள் அவசியமான காரியத்திற்கு உதவாத நிலைக்கு பெயர் தான் மறதி. சரியான நேரத்தில் சரியான காரியங்கள் முடிக்கப்படுவதற்கு நினைவு ஒன்று தான் வழி என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மறதியாலும் கூட காரியம் முடியலாம். எது சரி? நினைவு மற்றும் மறதி என்பது மனம் சம்பந்தப்பட்டது. கடந்த காலத்தில் பிடிக்காத விசயங்களை நினைக்கும் பொழுது பல கசப்பான அனுபவம் ஏற்படுகின்றது எனில்
- Published in Article – List
இன்றைய காலத்து இன்னல்களும் அவற்றிற்கான பரிகாரமும் !
தற்கால சமூகமானது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மற்றும் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வேதனை மிக்க அல்லது நோயாளி சமூகமாக உள்ளது. வெளியரங்கமாய் அது சக்தி வாய்ந்ததும், முன்னேற்றமாய் தென்பட்டாலும், உள்ளரங்கத்தில் அது வெற்றிடமாகவும், வெறுப்பு, பொறாமை, கோபம், இன்னும் பிற எதிர்மறை குணங்கள் எனும் புற்று நோயால், சமூகத்தின் ஒட்டுமொத்த நல்ல சாராம்சம் அரிக்கப்பட்டு அழிந்து விட்டது. இப்போது அத்தகைய இன்னல்களுக்கான காரணம் என்ன? இதற்குச் சாத்தியமான பதில் என்னவெனில், அந்த அனைத்துப்
- Published in Article – List
போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளும்போது பரபரப்பின்றி அமைதியாக இருப்பதற்கு நினைவில் கொள்ளவேண்டியவை:
நன்றி: The World Renewal, Magazine இது உங்களது ‘கர்மம்’ என்று நினையுங்கள்! உங்களுடன் நீங்கள் இருப்பதை அனுபவிக்கும் ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்று நினையுங்கள். போக்குவரத்தின் வேகம் குறையும்பொழுது உங்களது எண்ணங்கள் குறைவானதாக கற்பனை செய்யுங்கள். பிரேக்கை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், எதிர்மறையான எண்ணங்களுக்கு பிரேக் போடுவதாக கற்பனைசெய்யுங்கள் . எனது எண்ணங்கள் வேகமாக இருப்பின், பயணம் நீண்டதாகத் தோன்றும். எனது கவலைகள் எனது இலக்கை விரைவாகச் சென்றடையச் செய்யுமா என்று உங்களை நீங்களே
- Published in Article – By Points
உலகின் அனைத்து வித முரண்பாடுகளுக்கான காரணம் மற்றும் தீர்வு
தொழில் மற்றும் நிறுவனங்களின் குறிக்கோள்களை பகுத்தறியும் போது அவர்களின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள் நம்மை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகின்றன. அவை என்னவென்றால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான உந்துசக்தியாக இருந்தாலும் அவை அமைக்கப்பட்ட மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தின் தீராத மன வேதனை, நோய் மற்றும் துன்பங்களை விடுவிக்கக் கூடியதாக இல்லை. உணவிற்காகவும் , வாழ்வாதாரத்திற்காகவும் விதவிதமான தொழில்களை செய்யும் மக்களை உள்ளடக்கியது நம் சமுதாயம். மேலும், அது மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி
- Published in Article – List
சினம் தவிர்
பி.கு. குணசுந்தரி, தூத்துக்குடி ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் ! அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – கண்ணதாசன் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் பண்புடையவர்கள் பலர் வாழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் தான் என்கிறார் திருவள்ளுவர். பண்புகளில் தலைமையிடம்வகிப்பது,கோபம் கொள்ளாமல் அன்பால் எவரையும் அரவணைத்தலே ஆகும். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கின்றான், கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கின்றான் கோபம் கொண்டவன் தன்னையே இழக்கின்றான் கோபம் வந்தால் “அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன்”
- Published in Article – By story










