- தொழில் மற்றும் நிறுவனங்களின் குறிக்கோள்களை பகுத்தறியும் போது அவர்களின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள் நம்மை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகின்றன. அவை என்னவென்றால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான உந்துசக்தியாக இருந்தாலும் அவை அமைக்கப்பட்ட மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தின் தீராத மன வேதனை, நோய் மற்றும் துன்பங்களை விடுவிக்கக் கூடியதாக இல்லை.
- உணவிற்காகவும் , வாழ்வாதாரத்திற்காகவும் விதவிதமான தொழில்களை செய்யும் மக்களை உள்ளடக்கியது நம் சமுதாயம். மேலும், அது மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யும் பலவிதமான நிறுவனங்களையும், கூட்டமைப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அவற்றில் அனைத்து அல்லது பல நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்வதையும், அர்த்தமுள்ள மற்றும் உபயோகமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும், குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆனால் உலக வரலாற்றை நாம் கவனமாக புரட்டினால், தனி மனிதன் மற்றும் நிறுவனங்களின் நல்லெண்ணங்கள் இருந்த போதிலும் ,அவர்களின் முயற்சிகள் பலவாக இருப்பினும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அனுபவம் விரும்பத்தக்க அல்லது திருப்தியான அளவை அடையவில்லை என நாம் காண்கிறோம். அதற்கான காரணம் என்ன?
- ஒவ்வொரு தொழில், நிறுவனங்கள் அல்லது அரசியல், மதம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பல குழுக்கள் சில நிலையான ஆர்வம் அளிப்பதை நாம் பார்க்கிறோம். இந்நிறுவனங்கள் அனைத்தும், ஒரு வேளை தன் சொந்த வாழ்க்கையை நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் நிலையான ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குச் செவிசாய்ப்பதாக இல்லை.
ஒரு நிறுவனம் எந்த பிரச்சினையை தீர்ப்பதற்க்காக உருவாக்கப்பட்டதோ அந்த பிரட்சினைகளை தீர்ப்பதற்கான வேலை செய்வதைக் காட்டிலும், தாங்கள் அழியாமல் இருப்பதற்கே விரும்புகின்றனர் .
சந்தேகமேயில்லை அனைத்து நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகள் “இறந்த வாக்கியமாகவே” உள்ளன. அதாவது ஒரு நிறுவனம் உயிரோட்டம் இல்லாமல் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ! அதன்படி செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருதல் அல்லது அதிலிருந்து விடுபடுதல் என்பது வேதனைப்படுத்துவதாக அமைந்து விடுகிறது.
இது தெளிவுபடுத்துவது என்னவென்றால் பிறந்த எவரும் இறப்பர் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் நடைமுறையில் ஒவ்வொருவரும் எப்படியாவது வாழ்வதற்கு விரும்புகிறார்கள்.
கடுமையான போட்டியை எதிர்கொண்டும், தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் மற்றும், அவர்களின் உந்து சக்தி மற்றும் செயல்பாடுகள் மற்றவர்களின் விருப்பத்திற்கு கேடுவிளைவிப்பதாகவே இருக்கிறது அல்லது அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் இயற்கையிலேயே தீமையிலிருந்து விலகாமலிருக்கிறார்கள்.
உதாரணமாக மருத்துவ தொழில் செய்பவரை எடுத்துக்கொள்வோம். அதிக நோயாளிகள் இருந்தால் அவர்கள் வெற்றியடைவார்கள். அதிகமான நோயாளிகள் இருந்தால் அதிக மருத்துவர்கள் ஜீவிப்பார்கள். இன்னொரு வகையில் கூறினால், நோயாளிகள் நோய்களைக் குணமாக்கி அவர்களின் வாழ்நாளை அதிகரிப்பது என்பது இந்தச் சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் சேவையாக இருந்தபோதிலும் கூட, அவர்கள் மருத்துவர்களாக நீடிப்பது என்பது, நோய் பரவுதல் அல்லது பல வகை நோய் தொற்று மற்றும் நோயாளிகள் அதிகரித்தல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவ்வாறாக அதிகமான அளவில் மக்கள் நோய்வாய்படுவார்கள் அல்லது மக்கள்தொகை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் நோயாளிகள் பெருகுவார்கள் என எதிர்பார்த்து, மருத்துவமனைகள் தங்களுடைய துறைகள், படுக்கைகள், மருத்துவர்கள் போன்றவற்றை அதிகரித்து தங்கள் சேவையை விரிவுபடுத்துகின்றன. நோய்களை முழுவதுமாக நீக்குவது அல்லது முழு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது என்பது மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதிகள் போன்றோரால் ஒரு போதும் முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்வது என்பது அவர்களின் வாழ்விற்கும் மற்றும் பலர் அறிய அவர்கள் கொண்டிருக்கும் நோக்கத்திற்கும் குறிக்கோளிற்கும் அவர்களே முடிவு கட்டுவது போன்றதாகும்.
இதைப் போலவே வியாபாரம் என்பது இலாப நோக்கத்திற்க்காகவும் உள்ள ஒன்று எனவே வியாபாரிகள் அதிகமான இலாபத்தை அடையும் பொருட்டு, பல தவறான வழிகளைக் கையாள ஈர்க்கப்பட்டு வழி மாறுகிறார்கள். ஆகவே அவர்கள் போட்டியிடுவது, விளம்பரப்படுத்துவது, குறைந்தபட்ச கூலிக்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறைந்த விலைக்கு கட்சா பொருட்களை வாங்குவது போன்ற நீதியற்ற, நேர்மையற்ற, தூய்மையற்ற, மற்றும் அறிவுக்குப் பொருந்தாத கொடுஞ் செயல்களைச் செய்வதாக இருந்தாலும் கூட எல்லா வழிகளிலும் முயற்சி செய்து அதிக இலாபத்தைச் சம்பாதிக்கிறார்கள்.
அரசியலில் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய அமைச்சர் பதவியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும், முடிந்தால் அதை மற்றவர்களிடம் இருந்து அபகரித்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். அந்த நடைமுறையில் அவர்கள், முன்பு தங்கள் நலம் விரும்பிகள் மற்றும் அறிவுரையாளர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் அதிகாரத்தையும், பதவியையும் இழக்கச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அவர்களின் சுய ஆர்வம், அவர்களை மக்களுக்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்தல் என்ற பெயரில், தன்னுடைய குடும்பம் அல்லது தனது நண்பர்கள், யாராக இருந்தாலும், அவர்களைப் பின்னுக்கு தள்ளி விட்டு உயர்ந்த இடத்தை அடைய கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது .
அது போலவே, ஒரு வக்கீலின் பிழைப்பு என்பது விதி மீறல் அல்லது இரண்டு மனிதர்கள், நிறுவனங்கள், சமூகம் போன்றவற்றில் ஏற்படும் சண்டை போன்ற சட்ட வழக்குகளைப் பொருத்து அமைகிறது. சட்ட ஆலோசகர், வக்கீல், நியமிக்கப்பட்ட பொது அதிகாரி, சட்ட ஆணையர், அரசு தரப்பு வழக்கறிஞர், மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தக் கருத்துக்கு விருப்பம் மற்றும் விருப்பமின்மையை தருகிறார்கள். எனவே, நல்ல எண்ணங்களுடன், இந்த சட்டதொழில், குற்றத்தைக் களைய முடியாது.
இவ்வாறாக ஒவ்வொரு தொழிலிலும் தன்னுடைய கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் அரசு அதிகாரிகள் தொடங்கி வரி வசூலிப்பவர்கள், காவல்துறை, பொதுஜனம் வரை தங்கள் சுய ஆர்வம் நன்றாகச் செயல்படுத்த முனைகிறது.
குறைகாண முடியாதபடி, ஒவ்வொருவரிடமும் அதன் சொந்த ஆபத்திலும், தியாகம் செய்யக்கூடிய, மரபுசார்ந்த ஆர்வம் உள்ளது. சமுதாய நலனில் ஆர்வமுள்ளவர்களும், அதற்காக உழைப்பவர்களும் கூட, தன் குழுவின் ஆர்வத்தைப் பிரதானமாக மனதில் கொண்டு, மற்றதைக் காட்டிலும், அதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த குறுகிய தன்னலம் கருதுகிற மனப்பான்மை அல்லது குழு ஆர்வம் என்பது சமூக விரோதமானது. ஆகவே அது இந்தச் சமுதாயத்தை முரன்பாடுகளிலிருந்தும் விடுபட அனுமதிப்பதில்லை.
எனவே, துன்பங்களையும், சுய நலத்தையும் இந்த உலகிலிருந்து முழுவதுமாக நீக்குகின்ற பார்வையை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் அமைப்புகளும் மற்றும் சமுதாய நலனுக்கு உழைக்கும் அமைப்புகளும் இல்லாதவரை முரண்பாடுகளும் அப்படியே இருக்கும். ஏனெனில் அதற்க்கான காரணங்களும் அப்படியே இருப்பதால். இந்த உலகை உயர்ந்த குடும்பமாக, சொர்கத்தினை ஏற்படுத்துகிற பார்வையை தருகிற ஒரு அமைப்பு, சுயநலத்திற்கு அப்பாற்பட்ட கடவுளால் மட்டுமே நிறுவப்படுகிறது. அப்படிப்பட்ட உலகப் பார்வையையும் அதை அடைவதற்க்கான முறையையும் தருவதன் மூலம் எல்லாவித முரண்பாடுகளுக்கும் முடிவைக் கொண்டு வருகிற ஒரு கருவி தான் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்பது.
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் பார்வையில் சமுதாயம்:
அனைத்து ஆத்மாக்களும் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு இறைவனின் குழந்தைகள். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் இல்லாமையை இல்லாமல் ஆக்க வேண்டும். தானும் உழைத்து பிறரையும் உழைக்க வைக்க வேண்டும். யாரும் நஷ்டம் / துன்பம் அடையக் கூடாது. அனைவரும் சுகம்பெற தொழில், வியாபாரம், குடும்பவாழ்க்கையில் நேர்மையை கொண்டுவர வேண்டும்.
நற்சிந்தனை செய்வோம் ! நற்செயல் செய்வோம் ! நற்பலன் அடைவோம் !




