பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி
ஒரு நாள் ஒரு சிறுவன் தன் தாயோடு கடைக்குச் சென்றான். அப்போது அந்த அழகான சுட்டி சிறுவனைப் பார்த்துஅந்தக் கடைக்காரர் “உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மிட்டாய்களை எடுத்துக்கொள் என்று அன்பாகக் கூறினார்”. ஆனால் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை. ஆச்சரியமடைந்தக் கடைக்காரர் மறுபடியும் மிட்டாய் பெட்டியைத்திறந்து காட்டி ‘இந்தா மிட்டாய் எடுத்துக்கொள்’ என்று கூறினார். ஆப்பொழுதும் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை.
இந்த முறை அந்த சிறுவனின் தாய் அதைக் கவனித்துவிட்டு கூறினார் ‘மிட்டாய்களை எடுத்துக் கொள் ஒன்றும் கடிந்துகொள்ளமாட்டேன்’ என்று. ஆனால் அந்தச் சிறுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
உடனே அந்தக் கடைக்காரர். தானே தனது கை நிறைய மிட்டாய்களை எடுத்து அந்தச் சிறுவனின் கைகளில் நிறைத்தார்.இப்போது அந்தச் சிறுவன் மிக மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டான்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில் தாய் தன் மகனிடம் கேட்டார் “நீ ஏன் கடைக்காரர் மிட்டாயை எடுக்கச் சொல்லும்போது எடுக்கமறுத்தாய்?” என்று அதற்கு அந்தச் சிறுவன் கூறினான் “அம்மா, எனது கைகள் மிகவும் சிறியது அல்லவா நானாக எடுத்தால் என்னால் குறைவாகத்தானே எடுக்க முடியும். ஆனால் இப்போது பாருங்கள் அந்தக் கடைக்காரர் தனது பெரியகைளால்நிறைய அள்ளிக் கொடுத்துள்ளார்” என்று.
நீதி (நியதி) விளக்கம்:
ஆத்மாக்களாகிய நாம் நாமாக எதிர்பார்க்கும் போது சிறிது பிராப்திதான் கிடைக்கும். ஆனால் இறைவன் கொடுக்கும்போது நம் எதிர்பார்ப்புகளைத் தாண்டி – நம் தேவைக்கு அதிகமாகவே கொடுப்பார்.


