Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

திருப்தி

Tuesday, 10 May 2016 / Published in Article – By story

திருப்தி

என்ன செய்வேன்! எப்படி செய்வேன்!! என்று சொல்லுவது திருப்தியற்றவரின் பேச்சு !
நண்பர் 1: திருப்தியற்றவர்கள் கவலையில் மூழ்கி மகிழ்ச்சியற்றும், ஆரோக்கியம் இல்லாமலும்இருப்பார்களா?
நண்பர் 2: ஆமாம்! அவர் ஆனந்தமாக இருப்பதற்குப் பதிலாக குழப்பமடைந்து எப்பொழுதும் ‘நான் என்னசெய்வேன்! எப்படிச் செய்வேன்! எனது சூழ்நிலையே அப்படித்தான்! என்னால் முடிந்தது அவ்வளவுதான்!என்னைச் சார்ந்தவர்களின் பழக்கம் அப்படித்தான்! என்ற கேள்விகளை உருவாக்கிக் கொண்டேஇருக்கிறார்.

இங்கே போ! மனக்குழப்பம் அங்கே போ!

Horse 14_madurai_bk

(யார் ஒருவர் திருப்தியற்று இருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ள சக்தியை அறியாதவராக இருக்கிறார். அவர்எப்பொழுதும் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு இருக்கிறார். அதனால் அவர், ‘இப்பொழுது என்ன செய்வேன்?எப்படிச் செய்வேன்? எனக் குழம்புகிறார். திருப்தியுடன் இருப்பவரின் புத்தி சம நிலையுடன் இருக்கிறது.அதனால் நிர்ணயசக்தியுடையவராகிறார். ஆனால் திருப்தியற்ற மனிதன் இருமுகம் கொண்டகுதிரையைப்போல இருமனம் கொண்டவராக இருக்கிறார்.)
தனது சூழ்நிலையிலும் திருப்தியற்று, தொடர்பில் வருபவரிடத்திலும் திருப்தியற்று, தனது வீணானஎண்ணங்களில் மூழ்கி, முன்னேறுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், ஆத்ம சக்தியினை அதிகரிப்பதில்கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தனது பலவீனத்தை வெளிப்படுத்தி எப்பொழுதும் என்ன செய்வேன்!எப்படி செய்வேன்! என்ற முதுகெலும்பற்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொல்லி, தானே குழப்பத்தில்மூழ்கி விடுகிறார். கிடைத்ததை தனக்குச் சாதகமாக்கி, அதனிலிருந்து உதவியைப் பெறாமல் திருப்தியற்றுஇருக்கிறார். அவருக்குச் சிறிய பிரச்சனை வந்தாலும், அதனை பெரிது படுத்துகிறார். தன்னிடமுள்ள மிகச்சிறந்த சாதனங்களையும் உபயோகமற்றதாகக் கருதுகிறார். அவர் நிறைவை குறையாகவும், குறையைநிறைவாகவும் தவறாக மதிப்பிடுகிறார். மனக்குழப்பம் அதிகரிக்கும் போது உடலில் ஏற்படும் சிறிய சிறியபிரச்சனைகளையும் பெரிய பெரிய வியாதியாகக் கருதி தன்னை ஆரோக்கியம் இல்லாமல் பலகீனமாககருதுகிறார்.
திருப்தியுள்ள ஒருவர், தான் அடைந்த சிறிது பயனையும் பெரியதாக்கும் பண்பினால் புகழினை தன்வசம்வைத்துள்ளார். ஆனால் திருப்தியற்றவர் தன்னிடமுள்ள மதிப்பற்ற பொருளின் மீது கர்வம் வைத்து,தெய்வீகத் தன்மை இல்லாததன் காரணத்தால் முன்னேற்றப் பாதையில் செல்ல இயலாதவராக இருக்கிறார்.
திருப்தியுள்ள ஒருவர் தன்னிடத்தில் அனைத்தும் நிறைந்திருப்பதாகக் கருதுவதன் காரணத்தால் பிறரும்தைரியத்துடனும், தாமாகவே முன்வந்தும் அவருக்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். திருப்தியற்ற நபரிடம் பலஇலட்சம் இருந்தாலும் ஏழையாகவே கருதப்படுகின்றார். இவ்விதமாக, திருப்தியுள்ளவர் எந்தக் கடினமானசூழ்நிலையையும் எளிதாக்குகின்றார். ஆனால் திருப்தியற்றவர் ஒன்றுமில்லாத  சூழ்நிலையையும்பெரிதுபடுத்துகின்றார்.

நண்பர் 1: ஆமாம்! நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. திருப்திஉள்ள மனிதர்கள்தான் அரசனுக்குச் சமமாக ஆனந்தத்துடன் இருக்கிறார்கள். ”எந்த ஒரு விஷயத்திலும்திருப்தியாக இருப்பவர்களுக்குக் கோபம் என்பதே ஏற்படுவதில்லை”. திருப்தி இருக்கும் போது மனமும்,உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். இந்நிமிடத்திலிருந்து நான்திருப்தி என்ற உயர்ந்த குணத்தை கடைப்பிடிப்பேன் என்ற உறுதியான எண்ணம் என்னிடம் எழுகிறது.எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்டவரிடத்திலும், கோபப்படுதல், இகழ்ச்சி செய்தல், துன்பம் தருதல்,சிடுசிடுப்பாக இருத்தல் போன்ற கீழான பழக்கங்களை இப்பொழுதிலிருந்தே விட்டு விடுவேன்.
நம் மனதை இறைவனிடம் ஒருமுகப்படுத்தும் இதற்கான தியானப்பயிற்சியை செய்வோம் வாருங்கள்!!

தியானப் பயிற்சி: தினமும் காலையில் எழுந்து ஓரிரு நிமிடங்கள் இறைவனிடம் அன்பான உரையாடல்செய்யுங்கள்: “இறைவா! எனது அன்பான தந்தையே! இன்றைய நாளில் நான் திருப்தியுடன் இருந்துதொடர்பில் வரும் அனைவரிடமும் இனிமையாகவும், அன்பாகவும் பேசுவேன் மற்றும் காரியங்களைச்செய்வேன். அதற்கு தேவையான மனத்தெளிவையும், மன சக்தியையும் உங்களிடம் இருந்து இந்த காலைப்பொழுதில் அடைகிறேன்”.
சூரியனின் கதிர்கள் பூமியில் படுவது போல் இறைவனிடம் இருந்து ஒளிக்கதிர்கள் எனது நெற்றியில் இருபுருவங்களுக்கு மத்தியில் திலகம் வைக்கும் இடத்தில் பட்டுக் கொண்டே இருக்கிறது…. என உணருங்கள்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP