என்ன செய்வேன்! எப்படி செய்வேன்!! என்று சொல்லுவது திருப்தியற்றவரின் பேச்சு ! நண்பர் 1: திருப்தியற்றவர்கள் கவலையில் மூழ்கி மகிழ்ச்சியற்றும், ஆரோக்கியம் இல்லாமலும்இருப்பார்களா? நண்பர் 2: ஆமாம்! அவர் ஆனந்தமாக இருப்பதற்குப் பதிலாக குழப்பமடைந்து எப்பொழுதும் ‘நான் என்னசெய்வேன்! எப்படிச் செய்வேன்! எனது சூழ்நிலையே அப்படித்தான்! என்னால் முடிந்தது அவ்வளவுதான்!என்னைச் சார்ந்தவர்களின் பழக்கம் அப்படித்தான்! என்ற கேள்விகளை உருவாக்கிக் கொண்டேஇருக்கிறார். இங்கே போ! மனக்குழப்பம் அங்கே போ! (யார் ஒருவர் திருப்தியற்று இருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ள சக்தியை அறியாதவராக இருக்கிறார். அவர்எப்பொழுதும் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு
- Published in Article – By story
இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் !
பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி பெண்கள் சிலர் பக்தி தொடர்பான புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது இந்த வரியைக் கண்டனர். ‘இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் போன்று அமர்ந்திருப்பார்’ என்று இந்த வரியைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்துக்குள்ளாயினர். பிறகு ஒரு பெண் ஒரு நகை ஆசாரியை அழைத்து அவர் எவ்வாறு தங்கத்தை புடம் போடுகிறார் என்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். பின்பு அந்தக் காரியத்தை கவனமாகப் பார்த்தார். ஆனால் அந்த நகை ஆசாரியிடம் தான் படித்த விடயத்தையைப் பற்றி எதுவும் கூறவில்லை.
- Published in Article – By story
எல்லைக்கப்பாற்பட்ட பரிசு
பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி ஒரு நாள் ஒரு சிறுவன் தன் தாயோடு கடைக்குச் சென்றான். அப்போது அந்த அழகான சுட்டி சிறுவனைப் பார்த்துஅந்தக் கடைக்காரர் “உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மிட்டாய்களை எடுத்துக்கொள் என்று அன்பாகக் கூறினார்”. ஆனால் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை. ஆச்சரியமடைந்தக் கடைக்காரர் மறுபடியும் மிட்டாய் பெட்டியைத்திறந்து காட்டி ‘இந்தா மிட்டாய் எடுத்துக்கொள்’ என்று கூறினார். ஆப்பொழுதும் அந்தச் சிறுவன் எதையும் எடுக்கவில்லை. இந்த முறை அந்த சிறுவனின் தாய் அதைக் கவனித்துவிட்டு
- Published in Article – By story
சினம் தவிர்
பி.கு. குணசுந்தரி, தூத்துக்குடி ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் ! அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – கண்ணதாசன் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் பண்புடையவர்கள் பலர் வாழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் தான் என்கிறார் திருவள்ளுவர். பண்புகளில் தலைமையிடம்வகிப்பது,கோபம் கொள்ளாமல் அன்பால் எவரையும் அரவணைத்தலே ஆகும். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கின்றான், கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கின்றான் கோபம் கொண்டவன் தன்னையே இழக்கின்றான் கோபம் வந்தால் “அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன்”
- Published in Article – By story
அகத்தூய்மை
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை சிவபுரம் என்ற கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசல் அமர்ந்தபடி பகவத் கீதையை படித்துக் கொண்டே இருப்பார். சுப்பிரமணி என்ற இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் சுப்பிரமணி அந்த பெரியவரிடம் வந்து “தாத்தா எப்பொழுதும் இந்த புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறீர்களே , இதை எத்தனை நாட்களாக படிக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ஒரு ஐம்பது ஆண்டுகளாக படித்துக்
- Published in Article – By story
விநாடியில் ஜுவன்முக்தி
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை விருகபுரி என்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டை விஷ்ணுவர்தன் என்ற மன்னர் சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நாட்டு மக்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரது மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தனர். இருப்பினும் மன்னருக்கு வெகு காலமாக ஒரு மனக்குறை இருந்து வந்தது. தனக்குப் பின் தனது நாட்டை ஆள்வதற்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பது தான்
- Published in Article – By story
உயர்வாக இரு
நன்றி: The World Renewal, Magazine ஒரு ஊரில் ஒரு பெரிய கோவிலில் நிறைய புறாக்கள், வாழ்ந்து வந்தன. திடீரென்று, கோயிலின் திருப்பணி நடந்தது. அதனால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப்பறந்தன. வழியில், ஒரு தேவாலயத்தைக்கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப்புறாக்களும் அங்கு குடியேறின.சில நாட்கள் கழித்து, கிருஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்கத்தயாரானது. இப்போது, இங்கு இருந்து சென்ற பறவைகளும், அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடிப்பறந்தன. வழியில், ஒரு மசூதியைக்கண்டன
- Published in Article – By story
டிரஸ்டி நிலை
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை கோட்டையூர் என்ற மிகப் பெரிய தேசத்தின் மன்னன் மித்ரவர்மன், தானம், தர்மங்களில் சிறந்து விளங்கிய அவர் துறவிகள் மற்றும் சான்றோர்களையும் நன்றாக மதித்து நடந்து வந்தார். ஒருநாள் இரவு அவரது அரண்மனைக்கு துறவி ஒருவர் வருகிறார். இந்த நேரத்தில் துறவியா? என்ற கேள்வியுடன் அவரைப் பார்க்க கொலு மண்டபத்திற்கு வருக்கிறார் மன்னர் மித்ரவர்மன். துறவிக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து முடித்த பின் உங்களுக்கு என்ன வேண்டும் சாமி? என்று
- Published in Article – By story
இரக்கம், கருணை, மன்னிப்பு
நன்றி: The World Renewal, Magazine இரக்கம், கருணை, மன்னிப்பு ஆகிய வார்த்தைகளை நமது ஆன்மீக பாதையில் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? இரக்கம் என்பது ஒரு குற்றவாளியின் மீது தயை காட்டுகிற பண்பு என்பதாக ஒருவேளை நாம் நினைத்திருக்கக்கூடும் அல்லது ஒரு நீதிபதியின் விருப்புரிமை என்றோ அல்லது ஒருவரை மன்னிக்கும் அதிகாரம் பெற்ற ஒருவரின் செயல்பாடு என்பதாகவோ கருதலாம். அடுத்தவரின் துயரத்தால் ஏற்படுவதே கருணை. பெரிய மனதுடன் மன்னிக்கும் பண்பை உண்மையிலேயே பயிற்சி
- Published in Article – By story
- 1
- 2










