நன்றி: The World Renewal, Magazine
ஒரு ஊரில் ஒரு பெரிய கோவிலில் நிறைய புறாக்கள், வாழ்ந்து வந்தன. திடீரென்று, கோயிலின் திருப்பணி நடந்தது. அதனால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப்பறந்தன.
வழியில், ஒரு தேவாலயத்தைக்கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப்புறாக்களும் அங்கு குடியேறின.சில நாட்கள் கழித்து, கிருஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்கத்தயாரானது. இப்போது, இங்கு இருந்து சென்ற பறவைகளும், அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடிப்பறந்தன.
வழியில், ஒரு மசூதியைக்கண்டன அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப்புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து, ரமலான் வந்தது. வழக்கம் போல் இடம் தேடிப்பறந்தன. இப்போது உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.
கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு குஞ்சுப் புறா தாய் புறாவிடம் கேட்டது. ஏன், இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று ?
அதற்கு தாய்ப்புறா சொன்னது….
- நாம் இங்கு இருந்த போதும் புறாக்கள் தான்.
- தேவாலயத்திற்க்குப் போன போதும் புறாக்கள் தான்.
- மசூதிக்குப் போன போதும் புறாக்கள் தான்.
ஆனால் மனிதன் கோயிலுக்குப் போனால் ”இந்து‘ சர்ச்சுக்கு போனால் ”கிருஸ்தவன் ”, மசூதிக்குப் போனால் முஸ்லிம்” என்றது.
குழம்பிய குட்டிப் புறா ”அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே” அது போல தானே மனிதர்களும் என்றது.
அதற்கு தாய் புறா ” இது புரிந்ததால் தான், நாம் மேலே இருக்கின்றோம்” அவர்கள், ”கீழே இருக்கிறார்கள்”. என்றது……


