

Brahma Kumaris Madurai
+91 452 264 0315
Email: [email protected]
Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu
பி. கு. தீபா, மதுரை வாழ்க்கை வாழத்தான்! உங்கள் முன் வரும் காட்சிகளை கண் குளிரக் காணுங்கள், ரசியுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது புளித்துப் போன வாழ்க்கை கூட உங்களுக்கு இனிக்கும். எதிர்கால வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது உங்களுக்கு சந்தேகமானகேள்விகள் எழுந்தால் கிடைப்பது ஏமாற்றமே! கடந்த கால தாக்கத்தில் வாழ்ந்தால் கவலையே! பதிலைத் தேடி அலையாதீர்கள். அது வாழ வாழத்தான் புரியும். நிகழ்காலத்தில் வாழுங்கள். வாழ்க்கையைத் துறப்பதால் பதில் கிடைக்காது. உடனே கிடைத்துவிடும்பதிலெல்லாம் மூன்று காலத்திற்கும் பொருந்தாது.
பி.கு. லதா, பிரம்மா குமாரிகள், மதுரை யார் யாரையோ நேசிப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகங்களை நேசிக்கலாம். புத்தகங்களை நேசிப்பவர்கள் வாழ்வில் தோல்வி அடைய மாட்டார்கள். புத்தகங்களை படிக்கும் போது தலை குனிந்து படித்தாலும் பின்னர் நாம் தலை நிமிர்ந்து வாழ்வது நிச்சயம். புத்தகங்களை விரிக்காத வரை நமது புத்தியும் விரிவடைவது இல்லை. விரிக்காத வரை சிறகுகள் கூட பாரம் தான். விரித்து விட்டால் வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான். சிறு வயதில், படித்தால் தான்
பி .கு உஷா ராணி, மதுரை நன்றி: Purity Magazine நமது பூமியில் தண்ணீர் நிறைந்துள்ளது. சுற்றிலும் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதன் உடலில் நீரின் அளவு 60 சதவீதம் உள்ளது. நதிகள், ஏரிகள், பனிக் கட்டிகள் மற்றும் குளம் குட்டைகளிலும் தண்ணீர் உள்ளது. இது தவிர நிலத்தடி நீரும், ஆகாயத்தில் நீர் நிறைந்த மேகங்களும் உண்டு. நீர் ஆவியாகவும், திரவமாகவும், திடப் பொருளாகவும் இருக்கிறது. நீர் சுவையற்றது, மணமற்றது. நீர் நிறமற்றது என்றாலும்
பி.கு. செண்பகராஜ், மதுரை உடலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் நாம் மனதிற்கு ஓய்வு கொடுக்க நினைக்கின்றோமா? மனஓய்வு என்றால் என்ன? மனம் என்றால் என்ன? எண்ணங்கள் உருப்பெறும் இடம் தான் மனம். உடலின் அனைத்து அசைவுகளுக்கும் காரணமே இந்த மனம் தான். உடல் ஓய்விலும் ஒரு மன ஓய்வு உள்ளது. தூக்கத்தின் பல நிலைகள், மனநிலையின் ஆதாரத்திலே தான் அமைகின்றது. மனம், உடலுடன் இணைந்து எடுக்கும் ஓய்வே முழுமையான தூக்கமாகும். உடலுழைப்பு இல்லாதவர்கள் கூட நன்றாக தூங்குகின்றனர்
பி.கு. தேவகுமார், மதுரை மாணவ வாழ்க்கை ஒரு யோகம் (அதிர்ஷ்டம்) நிறைந்த வாழ்க்கை. அதுமட்டுமின்றி தனது பெற்றோர்களால் மற்றும் ஆசிரிய பெருமக்களால் பாரதத்தின் ஆதிபண்பாடுகளை வலியுறுத்தும் கால கட்டம் மாணவ வாழ்க்கை. இது அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு இறைக் கொடை என்று கூட கூறலாம். இன்றும் அந்தப் பருவத்தை கடந்த வயது வந்தவர்களிடம் கேட்டால், அது ஒரு பொன்னான காலம் என்றும் இராஜயோகம் என்றும், அது திரும்பக் கிடைக்காது என்றும் கூறுவார்கள். மாணவர்கள் மீது தான் நாளைய பண்பாடுகள்
பிரம்மா குமாரி. உமா, மதுரை இன்று பாரத தேசத்தில் மட்டுமின்றி உலக அளவில் மதம், ஜாதி, இனம் மற்றும் வகுப்பு வாதப் பிரிவினைகளினால் பெரும் பிரச்சனைகளை ஒவ்வொரு தேசமும் எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு ஒவ்வொரு தேசம் மட்டுமின்றி ஒரு சிறு குடும்பம் வரை இன்று சமயம். நன்னெறி மற்றும் ஆன்மிகம் சார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுதே நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம், தொண்டு மனப்பான்மை மற்றும் பண்பாடுகள் தழைத்தோங்கும். அது மட்டுமின்றி தனி
நன்றி: The World Renewal, Magazine இங்கே சில மக்கள் ஆன்மீகத்தில் தீவிர அன்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவ்வகையிலான ஆன்மீகம் முழுமையானதல்ல. ஒரு விதத்திலோ அல்லது வேறு விதத்திலோ இவ்வகை ஆன்மீகத்தில் பொருள் முதல் வாதத்தின் கீற்றுகள் காணப்படுகின்றன. இந்த மக்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுத்திக்கிக் கொள்வதோடு மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வற்புறுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களது மனம், பொருள் முதல் வாத முடிச்சுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் ஆன்மீகத்தை பரப்புவதற்க்கென
நன்றி: The World Renewal, Magazine கடவுளை கண்டறிதல் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களின் எல்லையில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரியதும் பூமிக்கடியிலுள்ள அணு ஆய்வுக் கூடமாகிய ‘செர்ன்னில்‘ (CERN) பணிபுரியும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “கடவுள் துகள்” (GOD PARTICLE) பற்றிய செய்தி உலகின் பெரும்பான்மையான தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானவர்கள் “எட்டின் பாரக” பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் என்பவரும் இந்திய
பி.கு. செண்பகராஜ், மதுரை மனித வாழ்க்கையில் மறதி என்பது தேவையா? அல்லது தேவையில்லையா? நமது நினைவுகள் அவசியமான காரியத்திற்கு உதவாத நிலைக்கு பெயர் தான் மறதி. சரியான நேரத்தில் சரியான காரியங்கள் முடிக்கப்படுவதற்கு நினைவு ஒன்று தான் வழி என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மறதியாலும் கூட காரியம் முடியலாம். எது சரி? நினைவு மற்றும் மறதி என்பது மனம் சம்பந்தப்பட்டது. கடந்த காலத்தில் பிடிக்காத விசயங்களை நினைக்கும் பொழுது பல கசப்பான அனுபவம் ஏற்படுகின்றது எனில்