நன்றி: The World Renewal, Magazine
நமது வாழ்க்கையின் நோக்கத்தை சுருங்கக் கூறினால் இரண்டு வார்த்தைகளில் கூறிவிடலாம். ஒன்று வெளிப்படுத்துதல். மற்றொன்று அனுபவம். நாம் ஒவ்வொரு செயலையும் செய்யும் போதும் நமது ஆத்மாவின் குணத்தை வெளிப்படுத்துகிறோம். அதே சமயம் இந்த பிரபஞ்சத்தின் குணங்களை மனிதர்கள் மற்றும் இயற்கையின் மூலம் நாம் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அனுபவம் நாம் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்லும் போது கிடைக்கலாம். நமது பயணத்தின் முக்கிய நோக்கமானது அமர்வது, ஒய்வு எடுப்பது மற்றும் நம்மை சுற்றி உள்ளவற்றை பார்ப்பதும், கேட்பதுமே ஆகும். எனினும் அப்போது நமக்கு குறுகிய காலமே கிடைப்பதால், நாம் பிறருடைய கலாச்சாரம் மற்றும் வழிமுறை அல்லது நடைமுறைகளை தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற தைரியமாக முயற்சி செய்து புதிய விசயங்களை நம் அனுபவம் என்ற வங்கியில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
நமது ஆத்மாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் வெளிப்படுத்துதல். வெளிப்படுத்துதல் ஆத்மாவின் சுவாசம் மற்றும் வாழ்க்கையாக உள்ளது. உண்மையில் சொல்லவேண்டும் என்றால், வெளிப்படுத்துதல் காரணத்தால் தான் ஆத்மா உடலில் புகுந்து உடலின் மூலமாக எதையும் வெளிப்படுத்துகிறது. இந்த உடல் இல்லை என்றால் ஆத்மாவால் உணர முடியாது. இந்த அத்மாவானது உடலின் மூலமாக சம்பாஷனை செய்வதால், ஆத்மாவின் குண நலன்களை வெளிப்படுத்துகிறது. எது நம் உள்ளிருக்கிறதோ அதுவே நமது வெளிப்பாடாக வெளிவருகிறது. அதனால் தான் நாம் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்“ என்று கூறுகின்றோம். நமது செயல்கள் நம் எண்ணங்களின் வெளிப்பாடுகள் எனலாம்.
ஆத்மா தன் பொம்மலாட்டத்தை இந்த உடல் மூலம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஆத்மாவானது ஒரு பொம்மலாட்டக்காரன். அது இந்த உடல் என்ற பொம்மையை ஆட்டுவிக்கிறது. ஒரு பொம்மலாட்டக்காரனுக்கு பொம்மையை பயன்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் திறன் தெரிந்து இருக்கும்.
அதுபோல ஆத்மாவானது ஒரு ராஜாவைப் போல, ஒரு அரசனைப் போல, இந்த உடலின் ஐம்புலன்களையும் ஆட்சி செலுத்துகிறது. நான் என்ற இந்த ராஜா எவ்வளவு நன்றாக தினந்தோறும் இந்த உடல் என்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி செய்து கொண்டிருக்கிறது, ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. வெண்ணை தடவிய கேக்கிலிருந்து இன்னும் ஒரு துண்டு கேக்கை சாப்பிடு என்று சொல்கிறது. வீண் வம்பு பேச்சுக்களை கொஞ்ச நேரமாவது கேள் என்று சொல்கிறது. கொடூரமான திரைப் படங்களை தொடர்ந்து பார் என்கிறது. இவை எல்லாம் நம் கனவுகளை ஒரு நாள் வேட்டையாடும் என்று நன்கு தெரிந்தும் செய்து கொண்டிருக்கிறோம்.
மனித உடலைப் போன்ற வசதியான மற்றும் குழப்பங்கள் நிறைந்த இயந்திரம் வேறு ஒன்றும் இல்லை. ஆத்மாவைப் போல ஒரு அழிவில்லா ஆட்டுவிப்பவனும் இல்லை. ஆத்மா ஒரு பொறியாக நெருப்பாக சக்தியாக இந்த சரீரத்தை (உடலை) பற்றிக் கொள்கிறது. இயங்க வைக்கிறது. ஆத்மாவாகிய இந்த ஒளி இல்லை என்றால் (சரீரமானது). உடலானது வெறும் சடலம் தான்.
சரீரத்தின் முக்கியமான உறுப்புக்களான மூளை மற்றும் இதயம் திறமையுடன் செயல்படுகிறது.
இவை எல்லாம் நமக்கு ஒரே விஷயத்தை தான் உணர்த்துகின்றன. அதாவது நம் வாழ்க்கையின் அழுத்தத்தை’ சுவாசத்தை சொல்கிறது. சுவாசம் நின்று விட்டால் எல்லாமே மறைந்து முடிந்து விடுகிறது. சில புலன்கள் நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்துகின்றன. வேறு சில புலன்கள் இந்த பிரபஞ்சத்தில் கிடைக்கக் கூடிய விஷயங்களை சீர் தூக்கி எடை போட்டு பார்த்து நல்லவை கெட்டவை என்று கிரகித்துக்கொள்கின்றன. சில புலன்கள் இவ்விரு செயல்களையும் செய்கின்றன. உதாரணமாக நமது கண்களின் மூலமாக மற்றவரை கொல்லும் படியும்’ பார்க்க முடியும், காதலாகவும் பார்க்க முடியும். கண்கள் ஒருவருடைய உருவத்தை மறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அவருடைய’ அடையாளத்தை தெரிந்து கொள்வது கடினம். கண்கள் உலகத்தை பார்க்கும் ஜன்னல்கள். நாம் இந்த கண்கள் என்ற ஜன்னல்களின் மூலமாகத் தான் உலகத்தை பார்கின்றோம். பார்வை இல்லை என்றால் நமக்கும் உலகிற்கும் உள்ள தொடர்பில் ஐந்தில் ஒரு பகுதியை இழக்கின்றோம். அது போலவே வாய் மூலமாக அன்பான நம்பிக்கை தரும் வார்த்தைகளை நாம் சிலருக்கு செய்கின்றோம் அல்லது எந்த வார்தைகளின் மூலமாகவே நமக்கும் மற்றவர்க்கும் உள்ள தொடர்பினை நம் வாழ்நாள் முழுவதும் இழக்கவும் முடியும்.
நமது நாசிகளும் நறுமணம் உள்ள நமக்கு பிடித்த மணத்தை சுவாசிக்கிறது. அல்லது கெட்ட அல்லது பிடிக்காத வாசனை வரும் போது நாசிகளை திருப்பிக் கொள்கிறது. அது போலவே உணர்வு (தொடுதல்) புலனானது எப்போதும் அன்பையும், கவனிப்பையும் விரும்புகிறது. வன்முறையையும் தகாத செயல்களையும் விரும்புவதில்லை.
நாம் இவ்வுலகில் இருக்கும், வாழும் காரணம் வெளிப்படுத்துதலும் மற்றும் அனுபவங்களை பெறுவதிலுமே, ஆதலால் உயரிய சீரிய, தெய்வீகமான விஷயங்களை வெளிப்படுத்துங்கள். மற்றும் அன்பவிங்கள் அல்லது அனுபவம் பெறுங்கள். நமக்கு எது தேவை, எது தேவையில்லை, எதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதனை விட்டுவிட வேண்டும் என்று தேர்வு செய்யும் திறமை நம்மிடம் உள்ளது. நாம் எதை செய்ய சொல்கிறமோ அதனை நம் புலன்கள் நடைமுறைப் படுத்துகின்றன, செய்கின்றன.
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, எந்த சலனமும் அசைவும் இல்லாமல் நாம் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறலாம், உலகச் சுற்றுப் பயணம் செல்லலாம், திறமையான தொழில் கருத்துகளை உருவாக்கலாம் என்று சிந்தனை பண்ணிக் கொண்டிருப்பது உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எங்கோ நடக்கும் விஷயங்களுக்கும் முகநூலுக்கு (பேஸ்புக் – madurai.brahmakumaris) விருப்புகளை கொடுப்பதற்கு சமம் ஆகும். ஆனால், நம்மைச் சுற்றி நாம் போட்டிருக்கும் வட்டத்திலிருந்து வெளியில் வந்து, மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டும்படி ஏதாவது செய்ய வேண்டும். அமர்ந்து சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. எனக்கு பிடித்ததை, என்னுடைய திறமையை, என் ஆர்வத்தை, எனது குறிக்கோளை, எனது உந்துதலை என் உறுதியான நிலைப்பாட்டை, என்னுடைய தொலைநோக்கு திட்டத்தை நான் செயலாக்கம் செய்ய வேண்டும். செயலில் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் எனது இலக்கை வெகு அருகாமையில், அடைய முடியும்.
வசந்தகாலம், பருவ காலங்களில் சிறந்த காலமாக இருப்பது போல, எதற்கும் ஒரு காலம், நேரம் வரும், அப்போது நம்மை நாம் வெளிப்படுத்த வேண்டும், நம்மிடம் உள்ள சிறந்த, உயரிய விஷயங்களை மலரச் செய்ய வேண்டும், வெளிப் படுத்த வேண்டும். காய்ந்து, பட்டு போன ஒரு மரமானது, நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறிய, புதிய இலைகளை வெளிப்படுத்துவது போல, நம்முள் இருக்கும் திறமைகளை, சிறப்புகளை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறவிக்குள்ளும் ஒரு பாவி இருக்கிறான். ஒவ்வொரு பாவிக்குள்ளும் ஒரு துறவி இருக்கிறான் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், தெய்வ தன்மையும் உண்டு. அசுரத் தன்மையும் உண்டு. நாம் யாரை வளர்க்க, வளரச் செய்ய போகிறோம் என்பது நம்மை பொறுத்து தான் உள்ளது.
நம் வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்களை நாம் சல்லடை போலஅலசி, சலித்து, நல்லவற்றை மட்டும் உள்வாங்கி கிரகித்துக் கொள்ள வேண்டும். ஒரு குப்பை தொட்டி போல அனைத்து வேண்டாத விசயங்களையும் நம்முள் போட்டு நிரப்பக் கூடாது. எந்த முகக் கண்ணாடி அணிந்து கொண்டு எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது எதை பார்ப்பது, எதை பார்க்காமல் விட்டுவிடுவது அதாவது ஒதுக்கி தள்ளுவது என்பது நம்மிடம் தான் உள்ளது.
அசைவில்லாமல், எழுந்து நம்மில் சீரிய உயர்ந்த விசயங்களை செயல்படுத்துவதற்கு இன்றே, இதுவே சரியான தருணம், சமயம் ஆகும். இந்த வாழ்க்கை உங்களுக்கு கொடுத்த மிக சிறந்த அனுபவங்களை, நல்ல முறையில் சிறப்பாக வெளிப்படுத்துங்கள்.
சரியான முக கண்ணாடி அணிந்து கொண்டு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் அதுவே உங்களுக்கு மிகுந்த நிறைவைத் தரும். உங்கள் பொம்மையை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.அதனை எப்படி ஆட்டுவிப்பது என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள். இப்போதும் அந்த ஒரு துண்டு கேக் உங்களை சாப்பிட தூண்டினால் அதனை போ என்று ஒதுக்குங்கள். நீங்கள் முன் நின்று வழி நடத்துங்கள்.நீங்கள் தான் பொம்மலாட்டக்காரர். நீங்கள் தான் கட்டளை இட வேண்டும் என்பதை மனதில் உறுதியாக நினைவில் கொள்ளுங்கள்.




