மனிதகுல வளர்ச்சி ஓர் மரத்துடன் ஒப்பிடப்படுகிறது.

மரத்தின் வேர்:

வேரின் மூலம் விருட்சம் வாழ ஆதாரமான தண்ணீர் கிடைக்கிறது அதுவே அஸ்திவாரம் ஆகும்

இந்த சிறிது கால கற்றல் நம்மை சீர்திருத்துவதோடு, உலக மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. ஆன்மீக உணர்வினால் நம் செயல்களை உயர்வாக்குவதே உலகை மாற்றுவதற்கான வழி.

விதை: இந்த முதிய விருட்சம் இனி வளர இயலாது என்ற நிலையில், விதையாகிய இறைவன் இவ்வுலகில் அவதரித்து அவரது போதனைகள் மூலம் மரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பழைய மரத்தில் இருந்து, புதிய மரத்தின் அஸ்திவாரம் இடப்படுகிறது.


அடிமரம் : இறைவன் தனது ஒப்பற்ற ஞானம் மற்றும் சக்திகளின் மூலம்
உறுதியான வேர்ப்பாகத்தை உருவாக்குவதன் மூலம் அடுத்த அடிமரமான சத்யுகம், திரேதா யுகம் என்ற பொன்னான, சதா மகிழ்ச்சி நிறைந்த உலகம் உருவாகின்றது.


கிளைகள் ஆரம்பம் ஆகின்றன.

தண்டுப்பாகம் முடிந்து கிளைகள் ஆரம்பிக்கும் போது மனிதர்கள் துக்கத்தை அனுபவிக்க ஆரம்பிகின்றனர். அப்போது இறைவனைத் தேடுகின்றனர்.
அப்போது தர்ம பிதாக்கள் அவதரித்து வாழ்க்கை முறைகளை வகுக்க ஆரம்பித்தனர். கலியுக இறுதியில் தர்ம பிதாக்களின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட நிலையில், அதர்மம் உச்ச கட்டத்தை அடைந்து மொத்த விருட்சமும் பட்டுப் போகும் நிலை அடையும் போது விதையாகிய இறைவன் இவ்வுலகில் அவதரித்து புதிய மரத்திற்கான வேர்ப்பாகத்தை பிரம்மா மூலம் அமைக்கிறார்.

அடுத்த படத்தை பார்க்க

மேலும் தகவல்களுக்கு