Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் !

Monday, 02 May 2016 / Published in Article – By story

இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் !

பி.கு. சீதாலட்சுமி, தூத்துக்குடி

பெண்கள் சிலர் பக்தி தொடர்பான புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது இந்த வரியைக் கண்டனர்.

‘இறைவன் தங்கத்தைப் புடம் போடுபவர் போன்று அமர்ந்திருப்பார்’ என்று இந்த வரியைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்துக்குள்ளாயினர். பிறகு ஒரு பெண் ஒரு நகை ஆசாரியை அழைத்து அவர் எவ்வாறு தங்கத்தை புடம் போடுகிறார் என்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். பின்பு அந்தக் காரியத்தை கவனமாகப் பார்த்தார். ஆனால் அந்த நகை ஆசாரியிடம் தான் படித்த விடயத்தையைப் பற்றி எதுவும் கூறவில்லை. அப்போது அந்த நகை ஆசாரி கூறியதாவது – தங்கத்தைப் புடம் போடும்பொழுது அதை நெருப்பின் மிகச்சூடான பகுதியான நடுப்பகுதியில் தான் பிடிக்கவேண்டும் இதனால் அதில் உள்ள கடுமையான அழுக்குகளை நீக்க முடியும்.

refining_madurai_bk

அந்தப் பெண் இப்பொழுது புரிந்து கொண்டார் இறைவன் கூட ஜீவாத்மாக்களை அதன் பாவக்கறைகளைப் போக்குவதற்காக பல கடினமான சூழ்நிலைகள் மற்றும் மனிதர்களின் நடுவில் நம்மைக் கண்காணிக்கின்றார் என்ற பிறகு அடுத்த விடயத்தைப் பற்றிக் கேட்டார். நீங்கள் தங்கம் தூய்மையாகும் வரை சதாகாலமும் நெருப்பின் முன் உட்கார்ந்திருப்பீர்களா என்று அதற்கு அந்த மனிதர் கூறினார்

‘நான் சதா காலமும் நெருப்பின் முன் தங்கத்தை பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது மட்டும் அல்ல எனது முழு கவனத்தையும் பார்வையையும் அதன் மீது மட்டும் தான் வைத்திருப்பேன் ஏனெனில் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகச் சூட்டில் இருந்தால் தங்கம் அழிந்துவிடும்.’ இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்தப் பெண் அமைதியாக இருந்தார்.

இறைவன் கூட இப்படித்தான் நம்மைக் கவனமாக இந்த உலகத்தில் பார்த்துக்கொண்டும் தனது இதயத்தில் பற்றிக்கொண்டும் இருக்கிறார். மறுபடியும் அந்தப் பெண். அந்த மனிதனிடம் “தங்கம் முற்றிலுமாக புடம் போடப்பட்டதாகிவிட்டது என்று நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சிரித்துக் கொண்டே. கூறினார்-“அது மிகவும் சுலபம் எனது பிம்பத்தை அதில் நான் எப்போது பார்க்கிறேனோ அப்போது வேலை முடிந்தது.”

நீதி (நியதி) விளக்கம்:

பரமாத்மா கூட நம்மை அந்த அளவிற்கு பவித்திரமாக்குகிறார். அவருக்குச் சமமாக நம்மை மாற்றும் வரை.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP