Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

அன்பு !

Friday, 13 May 2016 / Published in Article – By Points

அன்பு !

motherndaughter_madurai_bk

  • அன்பு என்பது உண்மையில் மகாசக்தி. அது நம்மை மிக உயரத்துக்கு எடுத்துச் சென்று இலேசாகவும்,காற்றுப்போலவும் ஆக்கிவிடும். எனினும் இதுதான் மிகவும் தவறுதலாக துஷ்பிரயோகம் செய்யப்படும்சக்தி. அன்புக்காக பல தரங்குறைந்த செயல்கள் இடம் பெறுகின்றன.
  • இப்போது உலகிற்குத் தேவை அன்பு. இனிமையான அன்பு என்று ஒரு பிரபலமான பாடல் கூறுகின்றது.உலகிற்கு உண்மையிலேயே தேவைப்படுவது என்னவெனில் அன்பைப்பற்றிய சரியானதும், நுட்ப திட்பம்ஆனதொரு விளக்கமேயாகும். உண்மையான அன்பானது புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதைஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சாதாரண மனக்கிளர்ச்சிகளில் அல்ல.
  • அன்பு சமநிலையுடையது, அதாவது தன்னிடமும், கடவுளிடமும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் இசைந்திருப்பது.
  • அன்பு சுயநலமற்றது. அன்பு சித்தம் போன போக்கில் நடக்கத் தூண்டும் மனக்கிளர்ச்சிநிலை அல்ல. ஆனால் உடல் உருவங்களுக்கு அப்பாற்பட்டுச் செல்லும் மேம்பட்டதோர் உணர்வுநிலையாகும்.
  • அன்பு உடல் சம்பந்தப்பட்டதல்ல. அன்பு ஆத்மாவின் உயிர்நாடி. நமது அன்பு நம்மைச் சுற்றிவெளியே பாய்ந்தோட வேண்டும். நாம் அன்புடையவராக இருக்கும்போது எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன் இரக்கமுள்ளவர்களாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்போம்.
  • அன்பு இல்லாவிடில் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் யாவும் நமது பார்வைக்கும் அனுபவத்துக்கும்இல்லாமல் பூட்டப்பட்டுவிடும். ஏனெனில், உண்மையிலேயே அன்புதான் திறவுகோல்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP