Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

12 ஜோதிர்லிங்கம்

Tuesday, 01 March 2016 / Published in Article – List

12 ஜோதிர்லிங்கம்

சோமநாத் (குஜராத்)

Somanath_madurai_bk

ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் இது முதன்மையானது. இங்கு சிவனை சோமேஸ்வரன் என்று கூறுவர். அரபிக்கடலின் கரையிலேயே இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

சோமநாத் என்றால் ஜீவாத்மாக்களுக்கு ஆன்மீக ஞானம் எனும் சோமரசத்தை அளித்து அவர்களுக்கு முக்தி, ஜீவன் முக்தி அடையும் வழியை காட்டியவர் என்பதாகும்.

மல்லிகார்ஜுனர் (ஆந்திரா) 

Malligarjun_madurai_bk

ஆந்திரப்பிரதேசத்தில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவஸ்தலம் ஸ்ரீசைலமாகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா தன் குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கு தன்னுடைய உண்மையான ஜோதி சொரூபத்தை உணர வைத்து அவர்களை மீண்டும் மாயையை வென்ற அர்ஜுனர்களாக மாற்றியதால் இறைவனை மல்லிகார்ஜுனர் என அழைக்கபடுகிறார்.

மகாகாலேஸ்வரர் (மத்திய பிரதேசம்)

Mahakaleswar_madurai_bk

இந்த சிவஸ்தலம் மத்திய பிரதேசத்தில் சிப்ரா நதிக்கரையில் உஜ்ஜயினி நகரத்தில்  அமைந்துள்ளது.  இக்க-யுகத்தின் இறுதியில் அவதரித்து அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி அளித்து அவர்களை தன்னுடன் சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்வதால் இவர் மகாகாலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

ஓங்காரேஸ்வரர்(மத்திய பிரதேசம்) 

Onhareshwar_madurai_bk

ஓங்காரேஸ்வரர் அழகுமிக்க சுயம்புலிங்கமாகும். ஓங்கார அமலேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் இதற்குண்டு. நருமதா நதி தீர்தத்தில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் எனில் ஆத்மா எனும் ஆன்மிக மந்திரத்தின் சத்தியமான அர்த்தத்தை எடுத்துணர்த்தி மனித வாழ்வில் ஒளி பெறசெய்ததால் இப்பெயரால் சிறப்பிக்கப்படுகிறார்.

வைத்யநாத் (ஜார்கண்ட்) 

Vaithiyanath_madurai_bk

கன்னியாகுமரியையும், உஜ்ஜயினையும் இணைக்குர் நேர் கோட்டின் மீது பரளி கிராமம் அமைந்துள்ளது. காம, குரோத விகாரங்களினால் பாதிக்கப்பட்டு துக்கத்திலும், அசாந்தியிலும் வாழும் மனித ஆத்மாக்களுக்கு ஞான அமிர்தத்தை அளித்து அவர்களை நிரோகியாக, அமரர்களாக இறைவன் மாற்றுவதால் அவரை வைத்தியநாதன் என்ற பெயரில் ஞாபகார்த்தம் அமைக்கப்பட்டுள்ளது.

பீமா சங்கர் (மகாராஷ்டிரா) 

Beemasankar_madurai_bk

இக்கோவில் மகாராஷ்டிராவில் உள்ள புனாவிற்கு அருகில் அமைந்துள்ளது. விகாரம் என்னும் அரக்கர்களிடம் அடிமையுற்று இருக்கும்போது அவ்விகாரங்களாகிய பீம் சூரனை அழித்து ஆத்மாக்களுக்கு உண்மையான விடுதலை அளிப்பதால் இப்பெயரால் இறைவன் புகழ் பிரசித்தமடைந்தது.

இராமேஸ்வரர் (தமிழ்நாடு) 

Rameshwar_madurai_bk

பாரதத்தின் தென்கோடியில் கடல் ஓரத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும். இக்கோயில் சதுரமாக வடிவமைக்கப்பட்டு நான்கு புறங்களிலும் கோபுரங்கள் உள்ளன. இந்த கடற்கரை திருத்தலத்தில் 24 விசேஷ தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்ரீ இராமர், இராவணவதம் முடித்துத் திரும்புகையில் ஸ்ரீசீதாதேவி சமேதராக கடற்கரையில் மணல் லிங்கம் வடிவமைத்து வழிபட்ட இடம் இராமேஸ்வரம் என புராணம் கூறுகிறது.

நாகேஸ்வரர் (குஜராத்) 

Nageshwar_madurai_bk

சிற்பக்கலையம்சம் கொண்டது இந்த நாகேஸ்வரா திருக்கோயில். கலியுகத்தில் மனித ஆத்மாக்களிடத்தில் இருக்கும் விகாரங்கள் எனும் நாகங்களை ஞான, யோக சக்தியால் அழித்து அவர்களுக்கு உண்மையான சுகத்தை அடைவதற்கான வழி காட்டினார் என்பதே இப்பெயருக்கு காரணமாகும்.

விஸ்வநாதர்  (உத்திர பிரதேசம்) 

Vishwanath_madurai_bk

பாரத நாட்டின் அனைத்து தீர்த்த ஸ்தலங்களிலும் தலை சிறந்தது காசி சேத்திரம் ஆகும். இது முக்தி சேத்திரம் என்றும் கூறுவர். இப்புனித ஸ்தலம் கங்கை கரையில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.

சொர்க்கம் எனும் புதிய உலகத்தை படைக்கும் காரியத்தை சிவன் செய்வதால் இங்கு அமைந்துள்ள லிங்கத்தினை  (உலகத்தின் தலைவர்) விஷ்வநாதர் என்று அழைக்கப்படுகிறது.

திரியம்பகேஷ்வரர் (மகாராஷ்டிரா) 

thiriyambakeshwer_madurai_bk

மகாராஷ்டிரத்தில் நாசிக் ரோடு அருகில் பிரம்மகிரி மலையில் கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கற்பக கிரகத்தினுள் ஒரு குழியில் மூன்று லிங்கங்கள் ஒன்றிணைந்து கை பெருவிரல் போன்று காணப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் இறைவன் அளிக்கும் மூன்று கால, மூன்று லோக ஞானம் எனும் கங்கையில் மூழ்குவதன் மூலம் தூய்மை அடைய முடியும் எனும் ஆன்மிகச் சிறப்பை விளக்குவதாகும்.

கேதார்நாத் (இமயமலை) 

Ketharnath_madurai_bk

இமய மலையில் இயற்கை எழில் சூழ்ந்த அழகுமிக்க ஸ்தலம் கேதார்நாத் ஆகும். யாரொருவர் இறைவனடியில் தன்னுடைய மனம் புத்தியை அர்ப்பணித்து அவர் வழி நடக்கிறாரோ அவருடைய அனைத்து துன்பங்களும் நீங்கி, சுகமடைவர் என்பதன் அடையாளமே இங்கு கேதார்நாத் எனும் இப்பெயரில் இறைவன் சிறப்பிக்கப்படுகிறார்.

கிருஷ்ணேஷ்வரர் (மகாராஷ்ட்ரா) 

Krishneshwar_madurai_bk

மகாராஷ்ட்ராவில் உள்ள ஒளரங்காபாத் அருகே இத்தலம் அமைந்துள்ளது. நடைமுறைவாழ்க்கையில் சாரமற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் மீண்டும் ஞானத்தினால் விழிப்புணர்வு பெறச் செய்து அவர்களை அமரலோகத்திற்கு தகுதியுறச் செய்ததன் காரணத்தினால் இங்கு இறைவனுக்கு கிருஷ்ணேஷ்வரர் என்ற பெயரில் வழிபாடுகள் நடக்கின்றன.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP