Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

இன்றைய காலத்து இன்னல்களும் அவற்றிற்கான பரிகாரமும் !

Tuesday, 19 April 2016 / Published in Article – List

இன்றைய காலத்து இன்னல்களும் அவற்றிற்கான பரிகாரமும் !

world_madurai1

தற்கால சமூகமானது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மற்றும் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வேதனை மிக்க அல்லது நோயாளி சமூகமாக உள்ளது. வெளியரங்கமாய் அது சக்தி வாய்ந்ததும், முன்னேற்றமாய் தென்பட்டாலும், உள்ளரங்கத்தில் அது வெற்றிடமாகவும், வெறுப்பு, பொறாமை, கோபம், இன்னும் பிற எதிர்மறை குணங்கள் எனும் புற்று நோயால், சமூகத்தின் ஒட்டுமொத்த நல்ல சாராம்சம் அரிக்கப்பட்டு அழிந்து விட்டது. இப்போது அத்தகைய இன்னல்களுக்கான காரணம் என்ன?

இதற்குச் சாத்தியமான பதில் என்னவெனில், அந்த அனைத்துப் பிரச்சினைகளுமே ஒருவகைப்பட்டதல்ல. மாறாக அவை பன்முகத்தன்மை உடையவை. அவை எல்லாம் சமூக பொருளாதாரம், அரசியல், மதவாத, இனவாத, ஜாதி ரீதியிலான பல வகைப்பட்ட பிரச்சனைகளாகும். எனவே இக்கால இன்னல்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு காரணங்களை மட்டும் குறிப்பிட முடியாது. இந்தப் பதில் சரியானதாகத் தெரிகிறது. ஆனால் நாம் உலகாயத, மற்றும் தேசிய பெரும் பிரச்சனைகளைக் குறித்த ஒரு விசாலமான பட்டியல் தயாரித்து, அவற்றை வகைப்படுத்த முற்படுவோமாயின், ஐந்து அடிப்படைக் காரணிகளே அனைத்துப் பிரச்சனைகளையும் விளைவிக்கின்றன என்பதைக் கண்டு கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் பொறுப்பான ஐந்து காரணிகள் ;

உதாரணமாக,

1.பெண்களைக் கேலி செய்தல்,

2. பாலியல் வன்கொடுமை,

3. பெண் கடத்தல்,

4. மனைவியைக் கொடுமைப்படுத்துதல், அல்லது வரதட்சணை,

5. கொலை,

ஆகிய இவையெல்லாம் காமத்தினால் நடக்கிறது. கலை, இலக்கியம், திரைப்பட மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வெளிப்படுகிற ஆபாசமானது மனிதனின் இழிவான பாலுணர்வு தூண்டுதலால் நிகழ்த்தப்படுகிறது. ஒரு மனிதன் தனது மொத்த உணர்ச்சியையும் கட்டுப்படுத்த இயலாததே, மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணமாக அமைகிறது. தனி மற்றும் பொதுவாக வாழ்வில் உள்ள தரக்குறைவான மற்றும் பாவச் செயல்கள், விபச்சாரம், வரம்பில்லாத பாலுறவு, தாம்பத்திய உறவுகளில் விரிசல், மற்றும் பெரும்பாலான விவாகரத்துகள், குடும்ப சிதைவுகள் ஆகியவை எல்லாம் காமம் என்ற ஒற்றைக் காரணத்தின் விளைவுகள் ஆகும்.

அதேபோல கோபம் என்ற மற்றொரு காரணி மிகப்பெரிய சமூக குழப்பத்திற்கு வித்திடுகிறது. பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவை கோபம் என்ற மரத்தின் கிளைகளாகும். ஆயுதங்களின் கூடுதல் விகிதம், ராணுவத்திற்கான அதிகப்படியான செலவு, சாதி கலவரம், பொது சொத்திற்கு நாசம் விளைவிக்கும் போராட்டங்கள், ஆகியவைகளோடு இன்னும் பல்வேறு குற்ற வகைகளும், கோபம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகும்.

மேலும் பொருளாதாரச் சுரண்டல், அரசியல், அடிமைத்தனம், எதேச்சாதிகாரம், வரி ஏய்ப்பு, கலப்படம், கடத்தல் , கருப்புப் பணம், பதுக்கல், லஞ்சம், கொள்ளை லாபம், ஊழல், கையாடல், பொருளாதார அநீதி மற்றும் ஏழ்மை ஆகிய இவையெல்லாம் பேராசை, பணத்தின் மீதான அதீத மோகம், மித மிஞ்சிய உடமையின் மீதான ஈர்ப்பு ஆகியவற்றின் விளைவுகளாகும் .

அதிகப்படியான ஆதரவு, சொந்த பந்தம் என்ற காரணத்திற்காக தகுதியில்லாதவர்களுக்கு உயர் பதவி கொடுத்தல், தேசியவாதத்தின் தீவிர வடிவங்கள் ஆகியவை ஒருவனின் சொந்த பந்தங்கள் மற்றும் நாட்டின் மீதுள்ள பற்றின் வெளிப்பாடாகும்.

இறுதியாக அகங்காரம், பொறாமை என்ற காரணியானது (மாயை) கருத்து வேறுபாடுகள், மோதல், விரோதம்,ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் ஆதிக்கம், கௌரவ தோரணை மற்றும் பலவற்றுக்கு அழைத்துச் செல்கிறது. மேலும் இந்த அகங்காரம், பகைமை, காலைவாரி விடுதல், வழக்கு, பலி வாங்கும் நடவடிக்கை, கௌரவக் கொலைகள் ஆகியவற்றுக்கும் அழைத்துச் செல்கிறது.

அன்பு சீர்குலைந்தால் மேலே சொன்ன ஐந்து மாயைகளும் உருவாகும்!

அன்பு அழிவாதலே ஐந்து மாயைகளும் உருவாகின்றன என்பதை நமது ஆழமான சிந்தனை நமக்குப் புலப்படுத்துகிறது. அன்பு என்பது ஒவ்வொரு மனித ஆத்மாவிலும், இயற்கையாய் அமையப் பெற்றப் பண்பாகும் .ஆனால் இந்த அன்பு சில ஆத்மாக்களில் பரிசுத்தமான நிலையிலும், சில ஆத்மாக்களில் நெறி தவறிய நிலையிலும் காணப்படுகிறது. அன்பு பரிசுத்த நிலையிலும் இருப்பது சத்யுகத்தில் தான் அங்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எல்லாமே நன்றாக நேர்த்தியாக இருக்கும் அங்கே குடும்ப ஆட்சி அமைப்பு முறை, சமூக பொருளாதாரம் – பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையாக அன்பு திகழ்கிறது. சத்யுகத்தில் சுத்தமான அன்பு இல்லையெனில், அது கலியுகத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க முடியாது.

திரேதாயுகத்தில் அன்பின் அளவு சற்று குறைந்து காணப்படும், அது வெள்ளியுகம், துவாபரயுகம் அல்லது தாமிரயுகத்தின் துவக்கத்தில் அன்பு சீரழிய துவங்கிவிடும். கலியுகம் அல்லது இரும்புயுகத்தில் அன்பு அதிக கறையுடன் காணப்படும். இவ்வாறு அனைத்து பிரச்சனைகளும் கலியுகத்தின் முடிவில் முழு தன்மையோடு இருக்கும். சீர்குழைந்த அன்பு என்றால் என்ன? என்பதில் நாம் தெளிவாகிவிடுவோம்.

சீர்குலைந்த அன்பு:

ஒவ்வொரு ஆத்மாவிலும் இயற்கையாய் அமையப் பெற்ற இந்த அன்பை மனிதனின் புறத்தோற்றம் மற்றும் பாலுணர்வு சார்ந்து இருக்குமாறு செய்தால் அது காமம் என்ற நிலையை அடையும்.

புறத்தோற்றத்தின் மீது நெருக்கமான விருப்பம் அல்லது சார்ந்திருத்தல் அல்லது உணர்ச்சி வசப்பட்ட பிணைப்பு, ஆகியவை சார்ந்து அன்பு காணப்படுமானால், அதுவே பற்று எனப்படும், மறுபுறம் இந்த அன்பு புலனின்பம் சார்ந்து வெளிப்படையாக தென்படுமானாலோ அல்லது பணம், சொத்து உடைமை ஆகியவற்றின் மீது அதீத ஆசை ஏற்படும் என்றாலோ அதுவே பேராசை எனப்படும். மாறாக அன்பு, சுய நலத்தை நோக்கி அதாவது ஒருவர் பிறரை விடத் தன்னையே அதிகம் நேசித்தால் அது சுயநலமாகி விடும். மற்ற விகாரங்களான வெறுப்பு, பொறாமை, பகைமை, கோபம், அகந்தை போன்றவை நெறி தவறிய நிலையிலுள்ள அன்பு ஆகும். அது எப்படி என்பதைப் பின்வருமாறு புரிந்து கொள்வோம்.

காமத்தின் மீது ஒருவருக்குள்ள ஆசை, விருப்பம்,பணம் அல்லது பொருட்கள் மீது ஒருவருக்குள்ள பேராசை, மற்றும் பௌதீக உறவுகள் மீது ஒருவருக்குள்ள பற்று அல்லது ஒருவரது சுயநலம் சார்ந்த நோக்கங்கள் நிறைவேறாமல் விளையும் கோபம். எனவே கோபம் என்பது சுயமாக தனித்து இருக்காது. நிறைவேறாத காமம்,பேராசை, பற்று,சுயநல குறிக்கோள் ஆகியவையே கோபத்தை விளைவிக்கிறது. அது போல பொறாமை, பகைமை மற்றும் (துவேசம்) போன்றவையும் தனித்து இருக்காது. இவையெல்லாம் ஒரு மனிதனுக்குள் எப்போது ஏற்படுகிறதென்றால் வேறொரு மனிதனின் நிறைவேறிய காமம், பேராசை, பற்று சுயநல குறிக்கோள் ஆகியவற்றிற்குக் குறுக்கே நிற்கும் போது ஏற்படுகிறது.

அதாவது ஒருவன் தன்னுடைய பேராசைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அவன் தன முனைப்பாளனாகவும், கர்வம் பிடித்தவனாகவும் ஆகிவிடுகிறான்.

அனைத்து விதமான துன்பங்களுக்கும் காரணமான விதை !

காமம், பேராசை, பற்று, சுயநலம், கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பெருமை ஆகிய மாயை என்ற தீய குணங்கள் முதல் நான்கிலிருந்து தோன்றியவை ஆகும். இவையெல்லாம் ஏற்கனவே விவரிக்கப்பட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் வேராக உள்ளன. இந்த வேரின் விதை என்பது நெறி தவறிய அன்பு ஆகும்.

நெறி தவறிய அன்பு என்றால் என்ன?

உடல் மீதும்,உறவுகள் மீதும், பொருட்கள் மீதும், அன்பு செலுத்தப்படுமானால் அதுவே நெறி தவறிய அன்பு ஆகும். அநீதி, அக்கிரமம் போன்ற அனைத்து விதமான எதிர்மறை பண்புகளை பெற்று இருப்பதால் இந்த நெறி தவறிய அன்பு தரம் குறைந்து காணப்படுகிறது. மறு மொழியில் சொல்வதானால் ஒரு மனிதன் தன்னை ஆத்மா என்பதை மறந்து தன்னை ஒரு உடலாகவும், பௌதீக கூறுகளாகவும் பார்த்தால், அவனுடைய அன்பு தரங்குறைந்ததாகவும், உண்மையை தவறாக புரிந்து கொள்பவராகவும், உண்மையான உறவுகளை அறியாதவராகவும் இருப்பார். மாறாக ஒருவர் தனது உண்மையான அடையாளமாகிய ஆத்மா என்பதை அறிந்து, பிறரையும் ஆத்மா என உணர்ந்தால், அவரிடம் எதிர்மறை இல்லாத பரிசுத்தமான அன்பு இருக்கும்.

நோய்களுக்கு நிவாரணம்:

இறுதியாகப் பகுப்பாய்வில் ஒரு உண்மையைக் கண்டறிந்தோம். அதாவது தூய்மையான அன்பே உலகிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக உள்ளது. இந்தப் பிரச்சனைகள் ஒன்று அன்பின்மையால் (அதாவது ) சுயநலத்தால் பிறக்கிறது .அல்லது தரங்குறைந்த அன்பாக அதாவது காமம், பேராசை, பற்று மற்றும் மேற்குறிப்பிட்ட உணர்ச்சிகள் நிறைவேறாமல் வெளிப்படுகின்ற பொறாமை, வெறுப்பு, கோபம் மற்றும் மேற்குறிப்பிட்ட எதிர்வினைகள் நிறைவேறுவதால் வெளிப்படுகிற அகந்தை ஆகியவற்றால் பிறக்கிறது.

இந்தப் பிரச்சனைகளிலிருந்து வெளிப்பட்டு நிவாரணம் பெற ஒரே வழி தூய்மையான அன்பாகும். இதுவே சுயத்தை தூய்மைப்படுத்துதல் அல்லது ‘சுய மாற்றம்” எனப்படும். இதற்கு கடவுளை பற்றிய அறிவு,தியானத்தைப் பழகுதல், மற்றும் தெய்வீக குணங்களைத் தாரணை செய்தல் தேவைப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவு என்பது நாம் ஆத்மா என்பதிலும், ஆத்மா அபிமானி நிலை என்ற அடிப்படையில் தான் நமது அன்பு அமையும். தியானம் என்பது ஒரு பயிற்சி,அது கடவுள் மீது அன்பில் நிலைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் காமம், பேராசை, பற்று போன்ற மாயைகளில் அன்பு அடைபடாது. மாறாக துறவு, திருப்தி விலகியிருத்தல் போன்ற அடிப்படை நற்குணங்களோடு அன்பு நம்மில் காணப்படும்

Steps_madurai

 

எனவே, மனித குலம் தற்சமயம் துன்புற்று வருகிற மேற்படி நோய்களுக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள இதுவே சரியான தருணம். அதோடு கடவுளைப் பற்றிய அறிவு, சகஜ இராஜயோகம், தெய்வீக குணங்களை தாரணை செய்தல் போன்ற உண்மையான தூய்மையான அன்பின் வெளிப்பாடுகள் மூலம் அந்நோய்களை குணப்படுத்தலாம்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP