நன்றி: The World Renewal, Magazine
கடவுளை கண்டறிதல் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களின் எல்லையில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரியதும் பூமிக்கடியிலுள்ள அணு ஆய்வுக் கூடமாகிய ‘செர்ன்னில்‘ (CERN) பணிபுரியும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “கடவுள் துகள்” (GOD PARTICLE) பற்றிய செய்தி உலகின் பெரும்பான்மையான தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானவர்கள் “எட்டின் பாரக” பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் என்பவரும் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் என்பவரும் ஆவர். கடந்த 1964 ம் ஆண்டிலேயே இவர்கள் “கடவுள் துகள்” பற்றிய நுட்பத்தைக் கணித்து முன் மொழிந்துள்ளனர். இந்த “செர்ன்” ஆராய்ச்சி கூடமானது கடவுள் துகள் பற்றிய கூடுதல் தரவுகளும், கூடுதல் பகுப்பாய்வும் அவசியமெனக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சியைக் குறித்து ஒட்டு மொத்த மனித இனமே பெருமகிழ்ச்சி அடைகிறது. இது அனேகமாகக் கடவுள் மறுப்பாளர்களை அதாவது நாத்திகர்களைக் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக மாற்றும்.

பழங்கால பாரதத்தின் மிகப்பெரிய புனிதர்களும் பண்டிதர்களும் பல வருடங்களாகத் தியான பயிற்சிகள் மேற்கொண்டதன் மூலம் தன்னையும், கடவுளையும் கண்டறிந்துள்ளனர். அந்த வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்கள் மூலம் அநேக வேத நூல்கள் பழங்காலத்தில் எழுதினார்கள். எப்படியோ மனித இனம் கடவுள் பற்றிய தேடல் தொடர்ந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பான கடவுள் துகள் பற்றிய செய்தியை பெரும்பாலான பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்ததை உணர்வார்கள். எப்படியாயினும், அவர்களுக்கு இருக்கின்ற எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் அவர்களால் புரிந்து கொள்ளவோ அல்லது முழுமையாக உபயோகம் அடைவதற்கான சந்தர்ப்பங்களோ இல்லை. அதை மனக்கண்ணால் பார்க்கக் கூடியது அல்ல. மேலும் எப்பொழுதும் மேலான தெய்வீக ஆற்றலிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போல் அந்த கடவுளிடமிருந்தும் அமைதியும், ஆறுதலும் பெற முடிவதும் இல்லை. ஏனென்றால் கடவுளின் பெயரால் குறிப்பிடப்படுகிற அனைவருக்கும் அதி மேலான அப்பாவாகிய ஒரு துகள் கடவுளின் பணியை செய்வதில்லை. கடவுளின் சொந்த வாக்குறுதியின் படி கடவுள் தனது மனித படைப்புகளுக்கு சரியான தருணத்தின் தம்மை நேரடியாக வெளிப்படுத்துவார். கடவுளின் வழிகள் உண்மையானவை, ஆனால் மிகவும் விசித்திரமானவை. நிலையான ஆன்மீக படைப்புகளாகிய மனித ஆத்மாக்களுக்கு கடவுள் இறங்கி வந்து தெய்வீக புரிதலை அளிக்கும் போது கடவுளின் விசித்திரமான வழிகள் புரிந்து கொள்ளமுடியும். படைப்பவரும் படைப்பும் நிலையானது என்பதோடு இந்த இரண்டைப்பற்றி சரியான புரிதல் வெளிப்படும் சமயம் தான் அகில உலகத்தினையும் திகைக்க வைத்து கண்கள் திறக்கப்படும் சமயமாகும்.
1936 – 1937 ம் ஆண்டு மிகவும் புனிதமான நேரம். அதுவே கடவுள் இந்த நிலையான உலக நாடக மேடையில் இறங்கி வந்து உதித்த நேரம், மேலான தந்தை கடவுள் சிவன் 1936 ன் மிக புனிதமான மஹா சிவராத்திரி அன்று முதல்முறையாக இறங்கி வந்து தனது ஊடகமாக தாதா லேக்ராஜ் என்பவரை தேர்வு செய்து அவருக்கு தெய்வீக காட்சிகள் கொடுத்த நாள். அவரே பிற்பாடு பிரஜா பிதா பிரம்மா என்ற திருப்பெயர் பெற்றார் சிவனின் வழியை (ஸ்ரீமத்) பின்பற்றினார். அகில உலகிற்கும் அந்த மேலான தந்தையை வெளிப்படுத்தி மகிமைபடுத்தினார். அதன் மூலமாக மிகப்பெரிய நன்மையை எல்லாருக்கும் கொண்டு வருகிறார்.
கடவுளின் வழிகள் அசாதாரணமான தனித்தன்மை வாய்ந்தது அதே சமயம் மிக தெளிவாக விளக்கப்பட்டது. எனவே சாதாரண பாமரரும் உணர்ந்து கொள்ளவும் பயிற்சி செய்து மாயை அமைதியின்மை மற்றும் துன்பத்திலிருந்து விடுதலையாகி முக்தி நிலையை அடையவும் முடிகிறது. அதோடு பந்தனத்திலிருந்து விடுதலையாகி ஆரோக்கியம் மற்றும் செல்வத்தோடு வாழும் நிலையாகிய ஜீவன் முக்தியும் அடைய முடிகிறது. தெய்வீக உள்நோக்கையும், தெய்வீக புத்தியையும் கடவுள் தானே கொடுத்தாலன்றி எப்படி ஒருவர் கடவுளை கண்டு நன்மை அடைய முடியும்?
ஆன்மீக ஞானத்தின் மூலமாக ஒருவர் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுவிட்டால் அதுவரை நன்மைக்கு ஏதுவான வழியில் கொண்டு செல்வதோடு தெய்வீக குணங்களை தாரணை செய்ய முடியும். அதனுள் மட்டுமே நமது கர்மம் (ஸ்ரேஷ்டமாகும்) சிறப்பானதாகும். சரியான யோகா அல்லது தொடர்பு இன்மையால் ஒருவர் உள்ளார்ந்த ஆற்றல் பெற முடியாது. மேலும் வாழ்வின் அசலான தூய்மை தன்மையைப் பெற முடியாது. முழுமையான நூறு சதவீத தூய்மை, மகிழ்ச்சி, உடல் நலம், செல்வம் ஆகியவற்றை அடைவதன் மூலம் இழந்தவர்க்கு வாழ்வையும், உன்னதமான தெய்வீக நிலையையும் அடையலாம். மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அடைவதன் மூலமாக ஒருவர் சத்யுக – திரேதாயுகத்தின் 21 பிறவிகளிலும் ஜீவன் முக்தி நிலையில் வாழும் போது பெறுவார் அல்லது அடைவர்.
தெய்வீக பதிப்பாகிய முரளியிலிருந்து ஞான சிந்தனை செய்வதன் மூலம் நாம் வாழ்வை வளப்படுத்தலாம். உயர்ந்ததிலும் உயர்ந்ததான ஆசிரியர் பிரஜாபிதா பிரம்மா மூலமாக உயர்ந்ததிலும் உயர்ந்த ஞானத்தை வழங்குவதே முரளியாகும்.
மாயா – இராவணன் ( எதிர்மறை )
ஆகியவற்றுடன் (விகாரங்கள்) நாம் நடத்தும் குத்துச் சண்டையில் வெற்றி பெற வேண்டுமானால், நாம் யுகம் யுகமாக வெற்றியாளராக இருந்து வந்திருக்கிறேன் என்ற நிச்சயத்தில் நமது புத்தியை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் ஐந்து மாயைகளான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை தானம் செய்து இராவணனை வெற்றி அடைய வேண்டும். முன்பு நீ மாயாவின் பந்தனத்தில் இருந்ததால் கடவுளிடம் ஒரு போலியான உறவை நீ கொண்டிருந்தாய். அந்த பந்தனத்தில் துன்பமே அனுபவமானது, மற்றும் போலியான மகிழ்ச்சியுமே அனுபவமானது. எனவே தான் போலியான உறவின் மூலமான மகிழ்ச்சியிலிருந்தும், பந்தனத்திலிருந்தும் விடுவிக்கும்படி கடவுளிடம் கேட்டுக் கொன்டிருக்கிறோம்.
கடவுளை நினைவு செய்பவன் பக்தன். இன்றைய உலகில் உண்மையிலேயே கடவுளை தெரிந்து கொண்ட பக்தர்கள் அரிது. கோபம் போன்ற மாயைகள் எல்லாம் அசுத்த ஆவிகள். அவற்றை கடவுளிடம் தானம் செய்திடல் வேண்டும். அவ்வாறு செய்தால் அவை திரும்ப வந்து உங்களுக்கு தொல்லை கொடுக்கும். ஐந்து மாயாக்களை தானம் செய்வதன் அர்த்தம் என்னவென்றால் அவற்றை விட்டு விலகி விட வேண்டும். 63 பிறவிகளாக நீங்கள் தடுமாறி கொண்டு இருந்தீர்கள். இந்த கடைசி பிறவியில் தூய்மையாக இருந்து பெரிய வருமானத்தை சம்பாதிக்க வேண்டும்.
நீங்கள், ஆன்மீக குழந்தைகள் புரிந்து கொள்ளுங்கள் இந்த உலகம் உருமாற வேண்டுமென்று, எனவே தான் மகாபாரத யுத்தம் நிகழ போகிறது. உமது புத்தி விழித்துக் கொண்டது. ஆன்மீக யுக்தி களத்தில் நீ மாயாவை எதிர்கொண்டு நிற்கிறாய். கடவுள் சொல்கிறார், “முழுமையான தொடர்பை” நீ என்னுடன் வைத்து விடு. அதற்கு பதிலாக உலகின் ஆட்சி தலைமையை மேலான தந்தை உனக்களிப்பார் – இது சிறிய விசயமும் இல்லை, சிறிய ப்ராப்தமும் இல்லை.


