Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

ஆன்மீகம் சார்ந்த பொருள் நிலை அல்லது பொருள் சார்ந்த ஆன்மீகம்

Friday, 10 June 2016 / Published in Article – List

ஆன்மீகம் சார்ந்த பொருள் நிலை அல்லது பொருள் சார்ந்த ஆன்மீகம்

need-vs-want-bk_madurai

நன்றி: The World Renewal, Magazine

இங்கே சில மக்கள் ஆன்மீகத்தில் தீவிர அன்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவ்வகையிலான ஆன்மீகம் முழுமையானதல்ல. ஒரு விதத்திலோ அல்லது வேறு விதத்திலோ இவ்வகை ஆன்மீகத்தில் பொருள் முதல் வாதத்தின் கீற்றுகள் காணப்படுகின்றன. இந்த மக்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுத்திக்கிக் கொள்வதோடு மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வற்புறுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களது மனம், பொருள் முதல் வாத முடிச்சுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் ஆன்மீகத்தை பரப்புவதற்க்கென அர்ப்பணித்து அதை உயர்ந்த கருத்தியலை நோக்கி செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களது நடத்தையும், வழிமுறைகளும், நம்பிக்கையும், அபிலாசையும் ஒரு தனித்துவமான பொருளியலை தெளிவாக பிரதிபலிக்கிறது. அவர்கள் ஆத்ம உணர்வு பற்றிய நன்மைகளை அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மை அதே போல தேக உணர்வை கைவிடும்படி மற்றவர்களை அறிவுறுத்துகிறார்கள். மேலும் அவர்கள் ஆத்ம உணர்வு பயிற்சியும் செய்கிறார்கள். ஆனால் ஆன்மீகத்தை பரப்புகின்ற அவர்களது ஆர்வத்தில் பணமும் பொருளும் கொண்ட மனிதர்களிடத்தில் கண்கள் நிலைத்திருக்கும். ஏனெனில் அவர்களது பணமும் பொருளும் ஆன்மீகத்தைப் பரப்ப உதவும் என்று, பல வழிகளில் ஆன்மீகத்தை போதிப்பதற்கு தாராளமாய் நன்கொடை செய்யக்கூடிய, பணக்காரர்களை ஊக்குவிக்க தகுந்த தருணத்தை அவர்கள் எப்பொழுதுமே எதிர்நோக்கி இருப்பார்கள்.

ஆனால் இதை செய்யும் பொழுது அவர்களுடைய மனம் முழுமையாக ஆன்மீகத்தில் லயித்திருக்காது. மாறாக உலகாய அபிலாசைகளில் அசை போட்டுக்கொண்டிருக்கும். அவர்களுக்கு பெருமை, புகழ் ஆகியவற்றின் மீது மறைமுக ஆசை இருந்து கொண்டே இருக்கும். ஆன்மீகத்தின் மேலான பிரபுக்களாக தாங்கள் அறியப்படவேண்டும் என்பதற்காக பிரம்மாண்ட பொருட்செலவில் பெரிய ஆசிரமங்களை சொந்தமாக்கிட வேண்டுமென்ற பெரிய ஆசை வைத்திருப்பார்கள்.

இத்தகைய மக்கள் பெரிய சபைகளையும் பிரம்மாண்டமான கூட்டங்களையும் வைத்திருப்பார்கள், இவர்களது சொற்ப்பொழிவுகளைக் கேட்கவும், இவர்களோடு சமுதாய விருந்தில் பங்கெடுக்கவும் திரளான மக்கள் வருவார்கள். இம்மாதிரியான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவதன் நோக்கம் மக்களிடையே ஆன்மீக அதிர்வலைகளை பரப்புவதற்காக அல்ல. மாறாக பெரும் எண்ணிக்கையிலான மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவ்வாறு அவர்களது விருப்பமானது பெயர், புகழ் மற்றும், பொருளாதார பெருக்கம் கொண்டதாக இருக்கும். இந்த வகையில் அவர்கள் ஆன்மீக பொருள் பணத்தை ஏற்கக்கூடாது. கட்டிடங்களை எழுப்பக்கூடாது.அல்லது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பதல்ல உண்மையான ஆன்மீகம். தியாக – துறவு மனப்பான்மை உள்ளவர்களாகவும், வெற்றிடமாயுள்ள மறைந்து போகிற அற்பகால உலகாய விசயங்களை பெரிதும் விரும்பாதவர்களாய், முதல்வாதிகளாகவோ அல்லது பொருளாதார ஆன்மீக கதாபாத்திரங்கங்களாகவோ இருந்து வருகிறார்கள்.

இந்த வகையான மக்கள் உண்மைக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை தேடி அலைகிற ஆன்மீக பயணத்தை மேற்கொள்கிறவர்களாகவோ அல்லது மிகச்சாதாரண ஆன்மீக பயிற்சியாளர்களாகவோ இருக்கிறார்கள். இத்தருணத்தில் அவர்கள் தற்புகழ்ச்சியோ அல்லது பெரிய ஆசிரமத்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ கொண்டிருக்கமாட்டார்கள்….

needs_wants_bk_maduraiபெரிய அளவில் பணம் சேர்க்கவேண்டும் என்பதற்காக ஒரு மங்கிப்போன திட்டம் கூட அவர்களிடம் காணப்படாது. ஆனால் மேலே சொன்ன பயணத்தில் அவர்கள் முன்னேறிச் செல்கிற சமயத்தில் மக்கள் அவர்களைப் போற்றவும், துதிபாடவும் செய்யும் போதும் அதனால் பணமும், பொருளும், நிலமும் அவர்கள் முன்பாக குவிக்கப்படும் போதும் பணப்பூச்சியால் அவர்கள் கடிபட்டவர்களாகி, அலங்கார பட்டங்களுக்கும் புனைப்பெயர்களுக்கும் சொந்தக்காரர்களாகி விடுகின்றனர்.
ஆன்மீகம் வழுக்கக்கூடிய ஓடுகளால் பதிக்கப்பட்டது. இதன் மீது ஒருவர் மிகவும் கவனமாக நடக்க வேண்டியுள்ளது. ஒரு சிலர் அற்பமானவர்களாகவும், முகஸ்துதி செய்பவர்களாகவும் சூழப்பட்டிருப்பர். வேறு சிலரோ தாங்கள் விலையுயர்ந்த நன்கொடைகளும், நிறைய பணமும் கொடுத்ததால் சிறப்பு வெகுமதியை எதிர்பார்ப்பார்கள். அது போலவே இந்த முகஸ்துதி செய்து புகழ்ந்து பாடியவர்களும் ஆடம்பரமான மலர்க்கொத்து கொடுத்தவர்களும் சிறப்பு வெகுமதியை எதிர்பார்ப்பார். இது ஒருவருக்கு புகழ் மீது தாகத்தையும், பதவி அதிகாரம் பெருமை இவற்றின் மீது தீராத பசியை ஏற்படுத்துவதோடு அதை மேலும் கூர்மையாக்கும். ஒரு உண்மையான ஆன்மீகவாதி இவற்றை எல்லாம் கடந்து நிற்பார் அல்லது குறைந்தபட்ச நிகழ்ச்சிகளில் சேவை மனப்பாங்குடன் மட்டுமே பங்கெடுப்பார்.

பெயரையும் புகழையும் யாசிக்கக்கூடாது. ஆசைகளுக்கும், அபிலாசைகளுக்கும் மனதில் இடமளிக்கக்கூடாது. பௌதீக பொருட்களை விடுத்து நல்ல உள்ளுணர்வைத் தரக்கூடிய விசயங்களை நேசிக்கவேண்டும். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஆரோக்கியமான வாழ்க்கைதான் ஒருவர் வாழ வேண்டும்.

உண்மையான ஆன்மீகம் பொருள் முதல் வாதத்தை விலக்கி வைக்கும். பயமற்ற பரிசுத்த வாழ்க்கை வாழச் செய்யும். அதுவே ஒருவர்க்கு திருப்தியையும், நிலையான ஆனந்தத்தையும் கொடுக்கும். இதுவே ஒருவர் பெறக்கூடிய அரிதிலும் அரிதான கடவுளின் கொடை.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP