நன்றி: The World Renewal, Magazine
நம்பிக்கை எவ்வளவு மாயாஜாலமாக சில நேரங்களில் நம் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஞானம் மற்றும் பணிவோடு கூடிய நம்பிக்கை நம் வாழ்வை கவனத்தோடும், தைரியத்தோடும் வழி நடத்திச் செல்கிறது. தடைகளயும், சவால்களையும் தாண்டி நம்பிக்கையனது நம்மை, நம் சொந்த வாழ்விலும், தொழில் மற்றும் ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கையிலும் வெற்றியின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்கிறது. நம்பிக்கை என்ற சோதனையில் உச்சம் நமக்கு மதம் மற்றும் ஆன்மீக வழியிலிருந்தே வருகிறது. அந்த சோதனையை நாம் தகர்த்தெறிய வேண்டும். ஏனென்றால் நம்பிக்கையே நமது சுயமரியாதைக்கு அடித்தளமாகும். மேலும் அது நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்துகிறது. நற்பெயரை மற்றவர்களிடம் பரவச் செய்கிறது.
25௦௦ வருடங்களுக்கு முன்பாகவே, பல விதமான மத நம்பிக்கைகளை, கொள்கைகளை ஏற்படுத்திய குரு மார்கள் யாரும் எந்த கல்வி சாலைக்கும் சென்று எந்த விதமான சிறப்பு பயிற்சியும் பெறவில்லை. அவர்கள் தங்கள் தீர்க்க தரிசனத்தாலும், தொலை நோக்கு பார்வையாலும் புனிதமான மத தலைவர்களாக ஞானம் பெற்றார்கள். அவர்களில் சிலர் குறிப்பிட தக்க இடத்தையும் பெற்று, புதிய மதங்களையும் தங்கள் கால கட்டத்தில் உருவாகினார்கள். கடவுளின் அற்புதமான திட்டங்கள் எவ்வளவு அழகாக தீட்டப்பட்டு அவசியமான நேரங்களில் தேவையான விஷயங்களை பரவச்செய்கிறார். இம்மாதிரியான புதிய நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது. அதேபோல அந்தந்த நம்பிக்கைகளுக்கு ஏற்றாற்போல், எழுத்துக்களும், சடங்குகளும், வழிபாடுகளும் நடைபெறுகிறது.
எல்லா மதங்களிலும் மிகவும் பழமையான மதமாக கருதப்படும் “ஆதி சனாதன தேவி தேவதா” தர்மம் (உண்மையான தெய்வீக மதம்) ஒரு சக்தி வாய்ந்த இரட்டை கிரீடம் வைத்தாற்போல், அமைதி, மகிழ்ச்சி, புனிதம்(தூய்மை) போன்ற உயரிய கொள்கைகளை தங்களின் பிறப்புரிமையாக கொண்டுள்ளது. இந்த புனிதமான மதத்தின் சக்தி 25௦௦ வருடங்களாக மக்களின் மரியாதை, புனிதத்தன்மை மற்றும் ஒற்றுமையை தக்க வைத்து கொண்டிருக்கிறது. கால மாற்றங்களினாலும், மாறி மாறி வந்து கொண்டிருக்கும் தெய்வீகத் தன்மையாலும், மத குருமார்கள் உலகம் என்ற நாடக மேடையில் தோன்றி தங்களின் மதம் சார்ந்த நல்ல விஷயங்களையும், அதன் பொக்கிஷங்களையும், பலம், ஞானம் மற்றும் சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட பொதுவான கொள்கைகளையும் எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது. எனினும், நம்மிடம் நிறைய மதங்களும், அதன் உட்பிரிவுகளும் இருப்பினும் இந்த கடினமான கால கட்டத்தில் பொதுவாக நல்ல ஆன்மீகத் தன்மையுடைய, ஹிம்சை இல்லாத மதத்தை பின்பற்றுவது முக்கியமாகும்.
ஒரே மாதிரியான தன்மையுடைய ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து ஒன்று சேர்ந்து முழுமையான அஹிம்சை எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று எண்ணாமல் ஒவ்வொரு மனிதனையும் மதித்தல் என்ற ஒரு பொதுவான நோக்கோடு செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் சந்நியாசிகளும், பண்டிதர்களும், தத்துவ ஞானிகளும், மதத்தலைவர்களும் ஆன்மீக ஞானத்தின் தேவையை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பிக்கையின் சக்தியை புதுப்பித்தலும் அனைத்து நம்பிக்கைகளிலும் ஒற்றுமையை பரவச் செய்தலுமே தங்களின் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.
பல நூறாண்டுகளாக இந்த உலக மனித குடும்பமானது, புனிதம், ஞானம், சுயநலமில்லாத பல புண்ணிய ஞானிகளாலும், மத குருமார்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தர், தலாய் லாமா, தஸ்மண்ட் டூடூ, மகாத்மா காந்தி, இயேசுநாதர், மார்டின் லூதர் கிங், அன்னை தெரசா, போப் இரண்டாம் ஜான்பால், பண்டிட் ஜவகர்லால் நேரு, தாதி பிரகாஷ் மணி, மாதா அமிர்தானந்தமயி என அனைத்து பேரும் அவரவர் கொள்கை அல்லது நம்பிக்கை குறித்து மட்டுமே கவனம் செலுத்தாமல், சமுதாயத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் உணர்வு மற்றும் ஆன்மீகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
சரியான அனுபவங்களும், உதாரணங்களும், முன்மாதிரிகளும் இல்லாமல் யாராலும் தங்களுடைய பலவீனம் மற்றும் குறைபாடுகளிலிருந்து மீண்டு வர முடியாது. பிரம்மா குமாரிகளாகிய நாங்கள் பெரிதும் பாக்கியம் பெற்றவர்கள். நம் அனைவருக்கும் தந்தையாகிய, குருவாகிய சிவ பரமபிதா கடவுளை நாம் புரிந்து கொள்வதற்கும், தொடர்பு கொள்வதற்கும் சத்குருவான பிரம்மா பாபா எங்களுக்கு துணை புரிகிறார்கள். தந்தையின் நெறிமுறைகளை (ஸ்ரீ மத்) நேரடியாகவும், முழுமையாகவும் பின்பற்றி வாழ்வில் முழுமை அடைகிறோம்.
பிரம்மா, தங்களின் தியானத்தாலும், ஞானத்தாலும் உயரிய நெறிமுறைகளாலும் ஞானம் மற்றும் முழுமை அடைந்தார்கள். நல்ல உதாரணமாக, சரியான வழிகாட்டுதலில், அவரின் பொன்னான கொள்கைகளை கொண்டு இந்த சொர்க்கபூமியை அவர் தயார் செய்தார்.
நமது அன்புக்குரிய தாதி ஜானகி , தாதி ஹிருதய மோகினி மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களின் சீரிய வாழ்க்கை முறைகளாலும், தன்னலமற்ற சேவையாலும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும், ஜீவராசிகளுக்கும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் சிறந்ததொரு உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன அருமையான முன் உதாரணம், தூண்டுதல் அவர்களின் முக்கிய கொள்கையே வாழ்கையை நேர்மறையான நோக்கோடு வாழ்ந்து, அதன்மூலம் இந்த உலகத்தின் அமைதியற்ற சூழ்நிலையை மாற்றுவதேயாகும்.
இதன் முக்கிய அம்சம், காரணம் என்னவென்றால், பல்வேறு மதம் மற்றும் ஆன்மீக கொள்கைகளை சார்ந்தவர்களை அழைத்து 2௦12 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஹாலந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பதே ஆகும். அப்பொழுது தாதி ஜானகி ஜி வயது 96 ஆகும். இந்த சர்வதேச நீதிமன்றம் அமைதியின் அரண்மனை என்றும் அழைகப்படுகிறது. இதன் முக்கிய நபர் டெக்ஸ் கன்னிங், ஒரு சிறந்த விரிவுரையாளர், எழுத்தாளர், பேச்சாளர் குழுக்களுக்கு வழிகாட்டியாக, உலக சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பது பற்றியும், சமுதாயத்தில் தொழில் பங்கினைப் பற்றியும் பேசுவதில் வல்லவர். இவர் 25 ஆண்டுகளாக யூனிலீவர் நிறுவனத்தில் பணி புரிந்தவர். டெக்கரேட்டிவ் பேண்டிங்கில் மேலாண்மை இயக்குநராக உள்ளார்.
இவர் தாதி ஜானகி மற்றும் சகோதரி ஜெயந்தி அவர்களையும் விருந்தாளியாக வரவேற்றிருந்தார். இங்கு ஹலாந்தில் நடக்கும் இந்த நிகழ்வுகள் எல்லாம் பல்வேறு நாடுகளில் ஆன்மீக ஒற்றுமையை மேம்படுத்தி ஆழமாக பரவச் செய்யும் என்பது நிச்சயம். மேலும் இன்றளவும் நடைபெறுகிறது.
நாங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தாதி ஜி அவர்களுக்கும், சகோதரி ஜெயந்தி, டெக்ஸ் கன்னிங், சகோதரி ஜாக்குலின் மற்றும் இந்த ஹலாந்தில் உள்ள ஆன்மீக சேவை புரியும் அனைவருக்கும் அன்புடனும் பணிவுடனும் தெரிவிக்கிறோம். தாதி ஜி அவர்கள் தங்களின் ஆன்மீக ஞானத்தின் சக்தியை நேர்மறையாக தன் சுய மன மாற்றத்திற்கு, மேம்பாட்டிற்கும் ஒரு ஊற்றாக இருந்ததை உலக மாற்றத்திற்காக அளிக்கிறார்கள். தாதி ஜானகி ஜி அவர்கள் 101 வயதிலும் ஆன்மீக சக்தியின் உறைவிடமாகவும் ஒளி சக்தியான கடவுளிடம் எளிமையாகவும், திடமாகவும் மற்றும் முரளி கானங்கள் மூலமாகவும், தொடர் இராஜயோக தியான பயிற்சிகள் மூலமாகவும் தன்னை அர்பணித்துள்ளார்.
இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும் தவறாமல் காலையும் மாலையும், நட்சத்திர வடிவில் ஒளிமயமாக உள்ள கடவுளை, தெய்வீக சக்தியை தியானம் செய்யுங்கள். தெய்வீக விஷயங்களை படியுங்கள். அவை உங்கள் உள்ளத்தை மேம்படுத்தும். நீங்கள் சுதந்திரமாக, உங்களை நீங்களே ஆள்பவர்களாக, மனித குலத்திற்கு சேவை செய்பவர்களாக உலகத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்க உதவுவீர்கள்.
உங்களை நீங்கள் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சில ஆன்மீக வழிமுறைகளை கூறுகிறோம்.
196௦ ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த உயரிய வாசகங்கள் இப்போதும் புதியதாக, நம் மன மேம்பாடிற்கு உதவும் வழிமுறையாக பயன்படுகிறது. கடவுளின் அந்த உயரிய வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றுங்கள். கடவுள் மற்றும் உங்கள் திட்டம் பூமியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்குவதே. சொர்க்கத்தை உருவாக்கும் இந்த சேவையில் உங்கள் உடல், மனம், பொருள் அனைத்தையும் இந்த உயரிய காரியத்திற்காக பயன்படுத்துங்கள். நீங்களே கடவுளின் முழுமையான உதவியாளர்கள். அந்த தெய்வீகத் தன்மையை அஹிம்சையின் பலத்தோடு எங்கும் பரவச் செய்யுங்கள். மனிதர்கள் எப்போதும் அழிவான திட்டங்களிலும், கவலைகளிலுமே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். பரம பிதா நிச்சயமாக ஒரு புதிய உலகத்தை உருவாக்குவார். நீங்கள் அங்கு தூய்மை, அமைதி, மகிழ்ச்சியை பிரம்மாவிடமிருந்து அல்ல சிவ பரமாத்மாவிடமிருந்து பெறுவீர்கள். பிரம்மா அதற்கு ஒரு வழியாக உங்களுக்கு உதவுவார்.
சுமார் 5௦௦௦ வருடங்களுக்கு முன்பு சிவ பரமபிதா, பிராமணனை உருவாக்கினார். தற்போது மனிதர்கள் மிகவும் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எப்படியாயினும் கவலையான இந்த உலகம் மகிழ்ச்சியான பூமியாக மாறும். அம்மாதிரியான சொர்க்க பூமியில் குழந்தைகளே நீங்கள் வாழவேண்டுமென்றால், உங்களை புனிதமானவர்கள், தூய்மையானவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று கடவுள் நமக்கு விளக்குகிறார். இருப்பினும் இப்பாரதத்திலே செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதனால் பாரதம் அல்லது உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. மகிழ்ச்சியில்லாத ஒரே ஒரு ஆத்மா இருந்தாலும் கூட அந்த உலகம் துன்பத்தின் இருப்பிடம் தான். மாறாக, சத்யுகத்திலே ஒரு ஆத்மா கூட துன்பத்தில் இருப்பதில்லை. அத்தகைய தெய்வீக தன்மையுள்ள மதம் தற்போது மறைந்து விட்டது.
நீங்கள் எல்லாம் பாண்டவர்கள். கீதையை உபதேசம் பண்ணிய கடவுளுக்கு உதவியவர்கள். நீங்கள் ஆன்மீக கல்வியை கற்கவும், அதன் வழிமுறைகளை- ஸ்ரீமத்தை பின்பற்றவும் வந்துள்ளீர்கள். நீங்கள் சூரிய சந்திர பரம்பரையின் சத்யுகத்தையும், திரேதாயுகத்தையும் அடைவதற்கான முயற்சியை எடுக்கிறீர்கள். தெய்வீக தாய் தந்தையின் புனித அறிவை பருகுங்கள்.
கடவுளுக்கெல்லாம் கடவுளான சிவ பரமாத்மாவை அறிந்து கொள்ளாமல் யாராலும் நற்கதி (சத்கதி) அடைய முடியாது. அந்த சுதந்திரமான உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமென்றால், உங்கள் கர்மங்களின் கணக்கை எல்லாம் முடிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு முக்தி கிடைக்கும். நீங்கள் ஆன்மா என்பதை உணருங்கள். எப்போதும் கடவுளை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்கள் எல்லா செயல்களுக்கான விளைவுகளை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும். உங்களுடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை எந்த சூழ்நிலையிலும் செயல்களை செய்வதற்கு முன் உற்றுநோக்குவீர்களானால், நீங்கள் மிகச்சிறந்த ஆத்மாவாக கருதப்படுவீர்கள்.



#Dadijanaki
#GOD #SHIVA #PARAMATMA