Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

சவால்கள் – சக்திகள்

Tuesday, 29 September 2020 / Published in Article – List

சவால்கள் – சக்திகள்

-பி. கு. ஆஷா, நாகமலைபுதுக்கோட்டை

பெண்கள் சக்தியின் அவதாரம் என்றழைக்கப்படுகிறார்கள்.  வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவதற்கான அனைத்து சக்திகளும் பெண்களிடம் புதைந்திருக்கின்றன. புதையலை கண்டுபிடித்து வாழ்க்கையில் பயன்படுத்தும்போது தான் சவால்களை சாதனைகளாக மாற்ற முடியும். சவால்களை சமாளிப்பதற்கு பதில் எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கு உடல் பலம், மன பலம் மிக அவசியம். பெண்கள் சரியான நேரத்தில் உணவு அருந்த வேண்டும். போதுமான அளவு ஓய்வு, தூக்கம் அவசியம். சில பெண்கள் குடும்பத்தை கவனிப்பதில் ஈடுபட்டு தன்னை பராமரிக்காமல் விட்டு விடுவார்கள். அதன் விளைவாக சில வருடங்களிலேயே உடல் தளர்ந்து, மனச் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. ஆரம்பத்திலிருந்தே உணவு, தூக்கம் ஆகியவற்றை முறையாக வைத்து கொள்வது அவசியம். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்“. அதே போல் பெண்கள் ஆரோக்கியமாக மன அமைதி, உறுதியோடு இருந்தால் தான் குடும்பத்தை பராமரிக்கமுடியும்.  உடலை பராமரிப்பதற்கான பல வழிமுறைகளை இன்று நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் மனதை முறையாக பராமரிப்பதற்கும் சில பயிற்சிகளை கற்றுக் கொள்வது இன்றைய சூழ்நிலையில் மிக அவசியம்.  மனதை ஆரோக்கியமாக வலிமையாக வைத்துக் கொள்ள மனதில் நல்ல, சுத்தமான உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவது அவசியம்.  இது ஒரு கலை ஆகும்.  இந்த கலையை கற்றுக்கொள்ள பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்திற்கு ஒரு முறை வருகை தாருங்கள். “வாழும் கலையை கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து குடும்பத்தையும், சமுதாயத்தையும், உலகத்தையும் அமைதி, மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றி அமைக்கப்போகும் புது உலக படைப்பின் சிற்பிகளாகிய சாதனை பெண்களுக்கு ‘சர்வதேச மகளிர் தினத்திற்கான’ கோடானு கோடி வாழ்த்துக்கள்.”

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP