பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல பொன்விழா
ஆன்மிக அனுபவத் திருவிழா
70 ஆண்டுகால மகா தவயோகினியின் தெய்வீக தரிசனம்!

இராஜயோகினி பிரம்மா குமாரி ஜெயந்தி தீதி அவர்கள் பிரம்மா குமாரிகள் சர்வதேச அமைப்பின் கூடுதல் தலைமை நிர்வாகி ஆவார். UK யில் பிரம்மா குமாரிகள் கிளைகளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் இவர் அங்கு பல கிளைநிலையங்கள் அமைய காரணமாக இருந்தார். சகோதரி ஜெயந்தி அவர்கள் பாரத கலாச்சாரம், கிழக்கத்திய ஞானம் மற்றும் மேற்கத்திய கல்வியில் தனித்துவ கலையுடன் திகழ்கின்றார். ஆன்மிகத்தின் ஆழமான உண்மைகளை மிகத் தெளிவுடன் வழங்குகின்றார். மாற்றத்தின் சவால்களை மனிதகுலம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியான காலங்களில், அவரது செய்தி நம் ஒவ்வொருவரையும் நேர்மறையான பார்வை உடையவராக உருவாக்குகிறது. அவரது அன்மிக அறிவு, உள்ளார்ந்த அமைதி மற்றும் அன்பின் அதிர்வலைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கானவர்களை தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன.
UN அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சுற்றுச்சூழலில் நெறிமுறைகள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள்” நிகழ்ச்சிகள் மற்றும் “சிக்கலான காலங்களுக்கு ஆன்மிக பதில்” என்ற மாநாட்டில் முன்னாள் பாரதக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன் பங்கேற்றார். “இதயத்தின் மகிழ்ச்சியைக் கண்டுபிடி” என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு மற்றும் பார்சிலோனாவில் உலக மதங்களின் பாராளுமன்ற கவுன்சில் ஏற்பாடு செய்த மாநாட்டில் முக்கிய பேச்சாளாராக பங்கேற்றார். தீதி அவர்கள் உலகளாவிய மிகச் சிறந்த ஆன்மிக சொற் பொழிவாற்றும் வல்லுநர் ஆவார்.
பிரம்மா குமாரிகள் அமைப்பானது 1936-1937 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் அகில உலகத் தலைமையகமாக இராஜஸ்தானின் அபுமலை அமைந்துள்ளது. உலகெங்கிலும் 147 தேசங்களில் 6500 கிளைகள் மூலமாக மனிதகுல மேம்பாட்டிற்காக அரும்பணியாற்றி வருகின்றது. 1975 ஆம் ஆண்டு மதுரையில் இவ்வமைப்பு துவங்கப்பட்டு இன்று 14 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைநிலையங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட உப கிளைநிலையங்கள் மூலம் இறை ஞானமும் இராஜயோக தியானமும் கற்பிக்கப்படுகின்றன.




