Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

தலை குனிந்தால் தலை நிமிர்ந்து வாழலாம் !

Tuesday, 29 September 2020 / Published in Article – List

தலை குனிந்தால் தலை நிமிர்ந்து வாழலாம் !

#Book
#Reading

பி.கு. லதா, பிரம்மா குமாரிகள், மதுரை

யார் யாரையோ நேசிப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகங்களை நேசிக்கலாம். புத்தகங்களை நேசிப்பவர்கள் வாழ்வில் தோல்வி அடைய மாட்டார்கள். புத்தகங்களை படிக்கும் போது தலை குனிந்து படித்தாலும் பின்னர் நாம் தலை நிமிர்ந்து வாழ்வது நிச்சயம். புத்தகங்களை விரிக்காத வரை நமது புத்தியும் விரிவடைவது இல்லை. விரிக்காத வரை சிறகுகள் கூட பாரம் தான். விரித்து விட்டால் வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான்.

            சிறு வயதில், படித்தால் தான் வாழ்வில் உயர முடியும் என்பது சிலருக்கு பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு படிப்பில் முற்றிலும் ஆர்வம் இருப்பதில்லை. கேளிக்கை, விளையாட்டு, நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் ஆகியவற்றில் தான் ஆர்வம் இருக்கும். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் உடன் வந்து கொண்டே இருக்க முடியாது. அவரவர் தனது சுய வாழ்க்கையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரம் படிக்காமல் போய் விட்டோமே என்று வருந்துவதால் என்ன நன்மை ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த அறிவுரைகள் அப்போது தான் நினைவுக்கு வரும். வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் போது காலம் கடந்து போய்விட்டதாக நினைப்பார்கள். ஆனால் படிப்பிற்கு வயதில்லை. படிப்பிற்கான வாய்ப்புகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. வேலை அல்லது தொழில் செய்து கொண்டே தொலை தூரக் கல்வி முறையில் படித்து முன்னேற வழி இருக்கிறது. அவ்வாறு சாதித்தவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

ஆனால் பாடப் புத்தகங்கள் மட்டுமே புத்தகங்கள் என்று நினைத்து விடக் கூடாது. பொது அறிவு, உலக நடப்பு, உலக வரலாறு, அறிவியல், ஆன்மீகம், ஆரோக்கியம், வாழ்வியல் நெறிமுறைகள் முதலிய பல துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. பாடப் புத்தகங்களையும் கடந்து பல விஷயங்களில் நம் அறிவை வளப்படுத்தும் புத்தகங்கள் உள்ளன. நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் இவற்றைத் தவிர நாவல்கள், புதினங்கள்,  புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், மத சம்பந்தப் பட்ட வேதங்கள்-சாஸ்திரங்கள் என பல வகைகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிப்பது அவசியம். நல்ல விஷயங்கள் அனைத்திலும் சில கெட்டதும் புகுத்தப்படுவது போல தீய விஷ வித்துக்களை விதைக்கும் மற்றும் மனதைக் கெடுக்கும் புத்தகங்களும் உலா வருகின்றன. புத்தியை வடிகட்டியாக பயன்படுத்தி நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வது நம் கையில் உள்ளது.

            சில வருடங்கள் முன்பு வரை புத்தக வாசிப்பு என்பது பலரது வாழ்வில் ஒரு அங்கமாகவும் பொழுது போக்காகவும் இருந்து வந்தது. இந்த வாசிப்பு மன ஒருமுகப்படுதலை வளர்த்ததுடன், பரந்த புத்தியையும் அறிவையும் உருவாக்கியது. ஆனால் தற்போது தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் புத்தக வாசிப்பை வெகுவாக குறைத்து விட்டன. கைபேசி மூலம் வரும் விஷயங்களையும் செய்திகளையும் படிப்பது மற்றும் பரப்புவதே வாழ்வின் முக்கிய கடமையாக நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு வரும் விஷயங்களில் எண்பது சதவீதம் தவறானவையாகவோ,  பொய்யானவையாகவோ, ஏமாற்றவேண்டும் அல்லது ஒரு கருத்தை நம் மனதில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையாகவோ இருக்கின்றன. நம்மை முட்டாளாக்குபவையாக, நம் மனதையும் கண்களையும் கெடுப்பவையாக இருக்கின்றன. புத்தகங்கள் நமது நண்பர்கள் என்பதை உணர்ந்து, கைபேசியிடம் செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியை புத்தகங்களுடன் செலவிட்டால் வாழ்வு மேம்படும். புத்தகங்கள் நமக்குள் புத்தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.

 “புத்தகங்கள் முன் தலை குனிந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.”       

.கு. லதா, பிரம்மா குமாரிகள், மதுரை

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP