Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

Thursday, 12 October 2017 / Published in Article – By Points

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

சமூக ஆரோக்கியம்:

சமூக ஆரோக்கியம் அன்பு அமைதி மற்றும் நல்லிணக்கமான சூழ்நிலைகளை உருவாக்க ஒருவருக்கு சமூக ஆரோக்கியம் மிகவும் அவசியமானதாகும். சமூக ஆரோக்கியம் பெற்ற மனிதன் தன் தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்கின்றான். குழந்தையைப் பராமரிப்பதில் தேவையான கவனம் செலுத்துகின்றான். அமைதியான மேலும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்க திட்டமிடுவதில் ஒத்துழைப்பு தருகின்றான். திருப்தியான நிலையான நட்பை வளர்க்கின்றான். சமுதாயத்திற்கு ஏற்படும் சேதம் உண்டாவதை தவிர்க்கின்றான். கூடவே தன் சக மக்களுக்கு ஆன்மீக சேவையும் புரிகின்றான். தான் தொழில் செய்யும் இடத்திலோ சக தொழிலாளிகள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லிணக்கத்தை வளர்த்து ஒத்துழைப்பு கொடுத்து அமைதியான சூழ்நிலையை உருவாக்குகின்றான். சமூக ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது குடும்பத்தில் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு திருப்தியாக இருப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் உரிய கவனத்தை செலுத்துவது மற்றவர்களுக்கு சமூக சேவை செய்வது மற்றும் ஆன்மீக உள் எழுச்சி பெற்று சேவை புரிவதாகும். செய்யும் தொழிலில் திருப்தியற்ற நிலை வேலையில் பாதுகாப்பற்ற நிலை மனித நேயமற்ற தன்மை உணர்ச்சிவசப்படுவது போன்றவைகள் சமூக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற காரணங்களாகும். ஜாதி சமய இன மொழி வேறுபாடுகள் மனித உறவுகளின் இணக்கமின்மை, பொறாமை, வெறுப்பு, பேராசை, பெரும்பற்று, அகங்காரம் போன்றவைகள் சமூக ஆரோக்கியத்தை (Social Health) கெடுக்கின்றன.

மன மாசுகளின் விளைவுகள்:

மனம் மாசடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன மாசுகளை பொதுவாக முக்கியமான கீழ்க்காணும் 5 குழுக்களாக பிரிக்கலாம்.

  1. காம விகாரம் – தூய்மையற்ற நேர்மையற்ற காம இச்சைகள்
  2. கோபம் – வெறுப்பு, தாக்குதல், தற்கொலை, கொலை, பொறுமையின்மை, எரிச்சலடைதல்
  3. பேராசை – உண்ணும் ஆசை, பொருளாசை, ஆளுமையாசை, பொறாமை, திருப்தியின்மை
  4. பெரும்பற்று – மனிதர்கள், பொருட்கள் மேல் அளவு கடந்த பிடிப்பு
  5. அகங்காரம் – செறுக்கு, அகந்தை, அழிவு மனப்பான்மை

தொடரும் …

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP