-
நீங்கள் அமைதியான, சுகம் நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களா?
-
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அனுபவம் செய்கின்றீர்களா?
-
நீங்கள் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயனுடையவராக இருக்கின்றீர்களா?
-
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலட்சியப் பாதையில் பிறழாது சென்று கொண்டிருக்கின்றீர்களா?
-
நீங்கள் உங்கள் சுய வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திலும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றீர்களா?
நீங்கள்…
இக்கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு இல்லை என்ற பதில் வருமானால்? இத்தொடரை தொடர்ந்து படியுங்கள்! வாழ்வில் வளம் பல பெற்று வாழுங்கள்!!
- உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியத்தின் உண்மையான குணாதிசயங்களைப் பார்க்கும் பொழுது நம்மில் பலர் ஆரோக்கியமின்றி இருப்பதை நாம் கண் கூடாக காண்கின்றோம். அதிக கொழுப்புச் சத்து மற்றும் குறைந்த நார்ச்சத்து (Fibre) உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை, அதிக நெரிசலில் வாழ்தல், காற்று வேக நகர வாழ்க்கை, புகை பிடித்தல், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவைகளே பெரும்பான்மையான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
ஒரு கடலில் உள்ள பனி மலையைப் போன்று நோயின் வெளிப்பாடு மிகக் குறைந்த அளவே வெளிப்படையாக தெரிய வருகிறது. ஆனால் அதன் உண்மை நிலை உள்ளே பெரியதாக இருக்கின்றது.
கடலில் உள்ள பனிமலை

ஆரோக்கியமற்ற உணவு, துரித சிற்றுண்டிகள், சரியான நேரப்படி உணவு உட்கொள்ளாமை, புகைப்பிடித்தல், பொடி மற்றும் போதை மருந்துகளை பயன்படுத்துதல் ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் (Physical Health) கெடுக்கின்றன.
இராஜயோகத்தின் பங்கு
இராஜயோக தியானம் உடல் ஆரோக்கியத்தை மேன்மைப் படுத்துகின்றது. அதிகாலையில் எழுதல், தூய்மையாக இருத்தல், சீரான உணவு முறை, சரியாக ஓய்வு எடுத்தல், தீய பழக்கங்கள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளிளிருந்து விலகியிருத்தல், ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடைய வாழ்வு முறையை பின்பற்றுகின்ற காரணத்தால் இராஜயோகிகள் 90 சதவீதம் தன்னைத்தான் பல நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்கின்றனர்.

