Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

Tuesday, 30 August 2016 / Published in Article – By Points

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

இராஜயோகமும் மூளையும் :

விழிப்புணர்விற்கு ஏற்ப நமது மூளையானது நான்கு விதமான கதிர்களை உற்பத்தி செய்கின்றது.

maxres_bkmadurai

1.ஆல்பா கதிர்கள் (Alpha Waves) வினாடிக்கு 8 முதல் 12 கதிர்கள் வரை வெளிப்படுகின்றது. இக்கதிர்கள் வேகம் வாய்ந்தவை. அதிக மின்சக்தி கொண்டது. விழிப்புடனும் அதே சமயம் கண்மூடி ஓய்வுடன் இருக்கும் பொழுதும் வெளிப்படுவது.

2.பீட்டா கதிர்கள் (Beta Waves) வினாடிக்கு 13க்கும் மேல் வெளிப்படுகின்றது. இதுவும் அதிக வேகம் வாய்ந்தவைதான். குறைந்த மின் சக்தி கொண்டது. சுறுசுறுப்பாக இருக்கும் பொழுதும் தினசரி காரியங்களைச் செய்யும் பொழுதும் வெளிப்படுபவை.

3.தீட்டா கதிர்கள் (Theta Waves) வினாடிக்கு 4 முதல் 7 வரை மெதுவாகச் செல்லக் கூடியது. மிகவும் குறைந்த மின்சக்தி கொண்டது. தூக்கக்கலக்கத்தில் வெளிப்படுவது.

4.டெல்டா கதிர்கள் (Delta Waves) வினாடிக்கு 4க்கும் குறைவாக வெளிப்படுகின்றது. மிக மிக மெதுவாகச் செல்லக் கூடியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வெளிப்படுவது.

இராஜயோகிகள் எப்போதும் உலகப் பற்றிலிருந்து விடுபட்டிருப்பதாலும் கர்மேந்திரியங்களை கட்டுப்படுத்தியும் எண்ணங்களின் முறைகளை சீர்படுத்தியும் வைத்திருக்கின்ற காரணத்தினால் டெல்டா கதிர்களை என்றும் நிரந்தரமாக வெளிப்படுத்துகின்றனர். ஆரம்பப் பயிற்சியாளர்கள் கூட ஒரு வார காலத்திலேயே டெல்டா மற்றம் பீட்டா கதிர்களை உற்பத்தி செய்யும் உயர்ந்த முறையை மிக எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகின்றது. இம்மாதிரியான மூளைக் கதிர்கள் உற்பத்தியினால் அமைதி தன்னம்பிக்கை மற்றும் அதீந்திரிய சுகம் அடைய முடிகின்றது.

இராஜயோகத்தில் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களினால் கர்மேந்திரியங்கள் மூலமாக செய்யப்படும் உலகீய காரியங்களிலிருந்து மனதை விடுபட்டிருக்கும் முறை கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில் மூளையானது முழுமையாக ஓய்வு பெறுகின்றது. கண்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் கதிர்களின் முறைகள் மாறா வண்ணம் உறுதியுடன் இருக்கின்றன.

சாதாரணமாக ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் ஒரு மனிதனால் டெல்டா கதிர்களை உற்பத்தி செய்ய முடியாது. எனினும் இராஜயோகப் பயிற்சி செய்பவர்கள் வியக்கத்தக்க வண்ணம் வேறுபட்டவராக உள்ளனர். பிரச்சனைகளைத் தீர்க்கும் பொழுது கூட 50 மைக்ரோ வோல்டிற்கு மீறாமல் அவர்கள் கதிர்கள் இருக்கின்றன. தியானமற்ற நேரத்தில் பீட்டா கதிர்களையும் தியான மன நிலையில் தீட்டா கதிர்களையும் வெளிப்படுத்துகின்றனர்.

இராஜயோகி தன் மன சக்தியை உடலின் மூலம்செயல்படுத்தாமல் புத்தி மூலம் செயல்படுத்துகின்றார். தியான நிலையில் டெல்டா கதிர்களை அதன் மூலம் வெளிப்படுத்த முடிகின்றது. இது அறிவியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனின்று ஒரு உண்மை புலப்படுகின்றது. என்னவெனில் இராஜயோகிகள் சாதாரண மனிதனிலிருந்து வேறுபட்டு அன்றாட காரியங்களைச் செய்யும் பொழுது கூட மூளைக்கு ஓய்வு அளிக்கின்றனர்.

தொடரும்…

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP