மகன் :கடவுளை நம்புறீங்களா, அப்பா?
தந்தை :ஆமாம், நம்புறேன்.
மகன் :அவரை பார்த்திருக்கீங்களா, சந்திச்சிருக்கீங்களா ?
தந்தை :இல்லப்பா.
மகன் :பிறகு எதைவச்சு அவரை நம்புறீங்க ?
தந்தை :ரிஷிகள் கடவுள் இருக்கிறார்ன்னு எழுதிவைச்சிருக்காங்க.
மகன் :அவங்க அவரை பார்த்திருக்காங்களா, இல்ல சந்திச்சிருக்காங்களா?
தந்தை :எனக்கு தெரியலை.
மகன் :அப்பா, நான் கடவுளைப் பத்தி தெரிஞ்சுகணும். அவரப் பத்தி ஏதாவது சொல்றீங்களா .
தந்தை :கடவுள் தான் நம் எல்லாருக்கும் அப்பா.
மகன் :அப்படின்னா, அவர் அம்மாவுக்கு மாமனாராப்பா?
தந்தை :அடடா, இல்ல. அவர் அம்மாவுக்கும் அப்பா தான்.
மகன் :அப்ப நீங்களும், அம்மாவும் அண்ணன் தங்கையா?
தந்தை :ஓ, அப்படி வருதோ? எனக்குத் தெரியலப்பா.
மகன் :கடவுள் நம்ம அப்பன்னா, யார் அம்மா ?
தந்தை :கடவுள் நமக்கு அம்மாவும் கூட .
மகன் :அப்படின்னா, கடவுளுடைய உருவம் எப்படியிருக்கும்? ஆணாவா அல்லது பெண்ணாவா?
தந்தை :எனக்குத் தெரியலை.
மகன் :ஆனா, ஒரு விஷயம் உறுதி அப்பா !
தந்தை :அது என்ன ?
மகன் :நீங்களும் அம்மாவும் என்கிட்ட அன்பு செலுத்துற மாதிரி, கடவுள் நம்மோட அம்மா அப்பான்னா, அவர்க்கும் நம்ம மேல அன்பு இருக்கும்லப்பா.
தந்தை :ஆமா, அவர் அன்பான கடவுள் தான்.
மகன் :அப்படின்னா அன்பின் அடையாளமா அவர் நமக்கு என்ன தர்றார் அப்பா ?
தந்தை :அது எனக்குத் தெரியாது .
மகன் :சரி விடுங்கப்பா, ஆனா நம்ம அம்மா அப்பாவான கடவுள் எங்கிருக்கார் அப்பா ?
தந்தை :யூதர்கள் , கிருஸ்தவர்கள் மற்றும் முகம்மதியர்கள் அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறதா சொல்றாங்க. ஆனா, ஹிந்துக்கள், அவர் எல்லா இடத்திலயும் இருக்கிறதா சொல்றாங்க. புத்த தர்மத்தச் சேர்ந்தவங்களோ, இந்தக் கேள்விய கேட்கும்போது மௌனமா இருப்பாங்க அல்லது பதில் சொல்ல மறுப்பாங்க. சமணர்கள் கடவுளே இல்லன்னும், ஆத்மாக்கள் மட்டும் தான் இருக்கிறதாகவும், ஆத்மா கடவுள் ஆக முடியும்ன்னு சொல்றாங்க. அதனால், கடவுள் எங்க இருக்கார்ன்னு சொல்ல முடியாது.
மகன் :ஏன் கடவுளைப் பத்தி எல்லாரும் ஒரேமாதிரி சொல்ல மாட்றாங்க. நீங்களோ, அம்மாவோ என் முன்னாடி நேருக்கு நேரா நிறைய விஷயங்களை சொல்ற மாதிரி கடவுள், அவர் யாரு, எங்கிருக்காருன்னு சொன்னதில்லையா?
தந்தை :அவர் சொன்ன மாதிரி தெரியல, ஆனா அதபத்தி எனக்கும் தெரியல ?
மகன் :இன்னொரு கேள்வி கேட்கவாப்பா ?
தந்தை :கேளுப்பா.
மகன் :ராமு சொன்னான், அவங்க அப்பாக்கு கடவுளுடைய காட்சிகள் கிடைச்சுதாம். அவர் ரூபம் ஆண் போலவும் இல்லயாம், பெண் போலவும் இல்லயாம் , ஆனா,ஒரு அழகான பிரகாசமான புள்ளி போல இருக்குமாம். நாம் நைட்ல பார்க்கற நட்சத்திரம் போல இருக்குமாம். நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கறீங்கப்பா?
தந்தை :ஆனா அவருக்கு எப்படி அந்தக் காட்சிகள் கிடைச்சுதுன்னு நான் தெரிஞ்சுக்கணுமே.
மகன் :அவர் யோகா பயிற்சி பண்றாராம். அவர் பிரம்மா குமாரிகள் அமைப்புக்கு போறதா ராமு சொன்னம்பா.
தந்தை :அப்படியா! கடவுளோட இணையறதுக்கான வழி தான் யோகா!
மகன் :அதுமட்டுமில்லப்பா, ஒரு மனிதன் மூலமா கடவுள் நேருக்கு நேரா அவரப் பத்தி சொல்லி இருக்கார்ன்னும் ராமு சொன்னம்பா.
தந்தை :எனக்குத் தெரியல.
மகன் :நாம ஏன் அங்க போகக் கூடாது ?
தந்தை :சரிப்பா, ஒரு நாள் நாம அங்க போகலாம்.
#Father #Son #Conversation #Fathersday


