Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

சிவனுடைய அடையாளங்கள் எவ்வாறு சங்கரருடைய அடையாளங்களோடு ஒத்துப் போகின்றது !

Wednesday, 02 March 2016 / Published in Article – List

சிவனுடைய அடையாளங்கள் எவ்வாறு சங்கரருடைய அடையாளங்களோடு ஒத்துப் போகின்றது !

நன்றி: The World Renewal

மத உலகில் ஒரு பெருங்குழப்பம்  நிலவுகிறது. பலதரப்பட்ட சமய நம்பிக்கைகள் இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொன்றும் தாங்கள் தான் உயர்ந்தவை என்று தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் ஒரு விஷயத்தில்  மட்டும்.

அதாவது

LordShankar_ Madurai_bk

சங்கரர் விஷயத்தில் அடையாளத்திலேயே பெருங்குழப்பம் நிலவுகிறது. புராணங்களும், இதிகாசங்களும், வரலாற்று கதைகளும் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது. ஓவியர்களால் வரையப்படும் தேவதைகளின் உருவப்படங்களும்,கவிஞர்களின்  புகழ் பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  ஏனெனில் எல்லா ஓவியர்களும், எல்லா கவிஞர்களும் தன்னைத் தானே உணர்ந்த்தவர்களோ, அல்லது ஞானிகளோ அல்ல. எனவே அவர்களின் ஓவியங்களோ அல்லது எழுத்துக்களோ எப்போதும் உண்மை எனக் கூற முடியாது. இருந்த போதிலும் அவை மக்களின் புலன்களுக்கு இன்பம் அளித்து மக்களை மனமார வேண்ட செய்கின்றது. அது பெருமளவில் மத அமைப்புகளை உருவாக்கி அவைகள் இதை விசுவாசம் சார்ந்த பொருளாக எடுத்துக்கொண்டு அவற்றிலிருந்து மத நம்பிக்கைகளை விதியாக்குகின்றன.

சில நிலைகளில் இந்த உருவப்படங்கள், தேவதை பற்றிய தத்துவ ஞான கருத்துக்களை, விசுவாசமான விதத்தில் தெளிவாக விளக்குகின்றன.ஆனால் நாளடைவில் அஞ்ஞான  மக்கள் அதன் உட்பொருளை மறந்து மேம்போக்காக பொருள் கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக

சங்கரர் காளை  வாகனத்தில் வருவதாகவும் அவர் தான் தன் கரங்களில் திரிசூலம், உடுக்கை வைத்திருப்பதாகவும், கங்கை நதி அவர் தலையிலிருந்து புறப்பட்டு பூமியில் விழுவதாகவும் மக்கள் நினைக்கின்றனர். இதைப்போலவே சிவன்  சிவதாண்டவம் என்ற நடனம்  ஆடியதாகவும் நினைக்கின்றனர். எனவே உண்மை மற்றும் ஞானத்தின் அடிப்படையில் தவறான எண்ணங்களை களைவது என்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

lord_sivasankar_madurai_bk

சங்கரர் மீது காண்பிக்கப்படும் சிவனின் அடையாளங்கள்

பொதுவாக சங்கரரோடு தொடர்புடைய குறியீடுகள் பற்றி பார்ப்போம். நிஜத்தில் இந்த குறியீடுகள் உயர்ந்த ஆத்மாவான சிவனின் குணத்தை பற்றி தெளிவாக விளக்குகின்றன. அவருடைய உருவம் சிவலிங்கம்.

ஆனால் சிவலிங்கத்திற்கு உடல் அமைப்பு இல்லாத காரணத்தால் இந்த குணங்களை சிவலிங்க உருவத்தின் மூலம் விளக்க முடியாத காரணத்தால் சிவனுக்கு ஒரு உருவத்தை கொடுத்து அதன் மூலம் அவருடைய குணங்கள் தெளிவாக விளக்கப்படுகிறது. ஆனால் பிற்காலத்தில் அவர் சூட்சும உடல் உள்ள சங்கரரோடு அடையாளப் படுத்த படுகிறார். நாம் அதைப்பறி விரிவாக காண்போம்.

  1. நிர்வாணம் அல்லது திகம்பரா

முதலாவது கவனிக்கத்தக்கது என்னவென்றால்  அவர் உடை மற்றும் ஒப்பனை எதுவும் இல்லாமல் காட்டப்படுகிறார். அவர் “திகம்பரர்” என அழைக்கப்படுகிறார். திகம்பரர் என்றால் “உடை ஏதும் அணியாதவர்” ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளை உடையாக அணிபவர்” என்று பொருள் தெளிவாக “உருவமில்லாத உயர்ந்த சிவனை பொருத்தவரைக்கும் இது உண்மை.    ஏனெனில் ஆன்மீக வழக்கில் கூறப்படும் சூட்சும உடல் என்பது அவரிடம் இல்லை. அது ஆத்மா என்ற ஆடையோடு ஒப்பிடப்படுகிறது. மற்றபடி சங்கரர் என்ற தேவதை நிர்வாணமாக இருக்க முடியாது. ஏனெனில் அவருக்கு சூட்சும உடல் உள்ளது. இவ்வாறாக தெளிவாக விளக்கபடுவதன் பொருள் உருவமற்ற சிவன் எப்போதும் ஆத்ம உணர்வு உள்ளவர் என்பதாக உள்ளது. அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டால்  அதாவது விடுபட விரும்பும் எவர் ஒருவருக்கும் சுயத்தை அழகுபடுத்தும், மற்றும்  சுயத்தை போற்றும் எந்த ஆசையும் கூடாது. ஆனால் ஆத்ம உணர்வும் உள்ளவராக வேண்டும். ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு நிறைய சாதுக்கள் நிர்வாணமாக வாழ்கின்றனர்.

  1. உடலில் சாம்பல் பூசிக்கொள்ளுதல்.

சங்கரர்  நிர்வாணமாக மட்டுமல்ல. உடல் முழுவதும் சாம்பல் பூசுபவராகவும் காட்டப்படுகிறார். அது “பலனை எதிர் பாராமல் கடமையை செய்வது” என்ற கருத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. பிரதிபலன் எதிர்பாராமல் செயலாற்றுபவர் சிவன். அவருக்கு எல்லாமே சாம்பல் தான். அதாவது எந்த பொருளின் மீதும் பற்று இல்லை. ஆனால் இந்த ஆழ்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சில சாதுக்கள்  உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு அது கடவுளை திருப்தி படுத்துவதாக நினைக்கின்றனர். தேவதைகளின் உடல் சூட்சுமமாகவும் பளபளப்பாகவும்  இருப்பதால், சாம்பலால் தேய்க்க முடியாது. அவ்வாறு தேய்தாலும் அதை பிறர் காண முடியாது. என்ற போதிலும் மற்றவர்கள் சங்கரர் உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொள்வதாக நினைக்கின்றார்கள்.

இந்திய இலக்கியங்களில் பாம்பு கழுத்தில் சுருண்டு படுத்திருப்பது போல் தோற்றம் காண்பிக்கப்படுகின்றது. பாம்பின் மேல் பகுதி  சக்தி (சங்கம) யுகத்தையும், வால் பகுதி  அழிவையும் குறிப்பதாக உள்ளது. இதனால் அறிவது என்னவெனில்  கடவுள் காலத்திற்க்கு கட்டுப்பட்டவர் அல்ல. ஆனால் காலம் மற்றும் காலன் சிவனை அலங்கரிக்கும் ஆபரணமாக   இருக்கின்றது

  1. சடைமுடியும், கங்கையும்..

Ganga_madurai_bk

ஒருவர் சில தலைப்புகளை விவாதிக்கும் போது , அதன் கருத்து பொருளை நோக்கி செல்லும் போது, சில நேரங்களில் அது தேவை இல்லாத போது  தலையை பிய்த்துக் கொள்ளும் பேச்சில் அவன் மனம் போன போக்கில் போகிறான். என்று நாம் சொல்வது உண்டு. இந்தியில் “முடியின்  தோலை வெளிக்கொண்டு” வருகிறான் எனக் கூறுவது உண்டு. இவ்வாறாக முடி என்பது சில நேரங்களில் நினைப்பது அல்லது “ஞானத்தை கொடுப்பது” என்பதோடு தொடர்புடையதாக உள்ளது. இங்கு குறிப்பிடுகிற முடி “சடை முடி” மற்றும் கங்கை அதிலிருந்து பாய்ந்து செல்வது போன்று காட்டப்படுகிறது. பொதுவாக

  1. தெய்வீக ஞானம்,
  2. இராஜயோகம் (தியானம்) மற்றும்
  3. தெய்வீக குணங்கள் என்பதைக் குறிக்கும். மூன்று விதமான சிவபிரான் சடை காட்டப்படுகின்றன. இவற்றில் இருந்து கங்கை பாய்ந்து செல்வது என்பது ஆத்மாக்களை விடுவிக்கவும், தூய்மை படுத்துவதற்க்குமான மேலே கூறப்பட்ட மூன்று குணங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாத சில சாதுக்கள் சடை முடி வளர்த்துக்கொள்கிறார்கள்.  மேலும் கங்கை நீர்  தங்களை தூய்மை படுத்துவதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

      4. நான்கு கரங்களும், அழகிய முகமும்.

நான்கு கோணங்களை உருவாக்கும், முன்புறம் இரண்டு, பின்புறம் இரண்டு. ஆகிய நான்கு கரங்கள் நான்கு திசைகளை காட்டுகின்றன. இது கடவுள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். மேலும் அவர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகிய  திசைகளில் உள்ள மக்களை காக்கவும் ஆசீர்வதிக்கவும் முடியும் என்பதைக் குறிக்கிறது. அமைதியுடன் கூடிய அழகிய முகம் ஆத்மாவின் அழகு, அமைதி மற்றும் ஆனந்தத்தை குறிக்கிறது.

  1. திரிசூலம்

trishul_madurai_bk

வலது கரத்தில் உள்ள திரிசூலம் ,

  1. உடல்
  2. மனம், மற்றும்
  3. ஆன்மா சார்ந்த அல்லது நோய்கள், இயற்கை பேரழிவுகள், மற்றும் விகாரங்களால் வரும் ஆன்ம  வேதனை

ஆகிய மூன்று விதமான துன்பங்கள் பற்றி குறிக்கிறது.நாம் சிவனை நினைத்தால் இத் துன்பங்கள் நம்மை நெருங்காமல் தடுக்க முடியும். எனவும் ,அதை தீர்த்து வைப்பவர் எனவும் இவற்றிர்கெல்லாம் அப்பாற்பட்டவர் எனக் காட்டுகிறது. சதோ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். ஆகையால் சிவனை திரிகலாதரிசி  எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் இது

தூய்மை குறைவு

அமைதி குறைவு,

வளத்தில் குறைவு

ஆகிய துன்பங்களுக்கான மூன்று விதமான குறைபாடுகளும் அவரால் மட்டுமே தீர்க்க, முடியும் என்பதை காட்டுகிறது.

  1. உடுக்கை

uddukai1_madurai_bk

உடுக்கை என்பது மரத்தாலான ஒன்று. சிறிய முரசு போன்ற ஒரு கருவி ஆகும். இந்தியாவில் இது ஆர்வமுட்டும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பொழுது போக்கும் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும்  ஒரு கருவி ஆகும். நிகழ்ச்சி தொடங்கும் முன் மக்களை தான் பக்கம் கவர்ந்திழுக்க இக்கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இது சிவன் ஆத்மாக்களை பண்பாட்டினால் வளமாக்குகிற தெய்வீக ஞானத்தினால் ஆத்மாக்கள் புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட எல்லோரையும் அழைப்பதை விளக்குகிறது. உடுக்கையிலிருந்து வெளிவரும் இசையானது “நாதம்” என்றும் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து மொழியின் அடிப்படை எழுத்துக்களின் ஓசைகள் வெளிப்படுவதாக தெய்வ பற்று உள்ளவர்களால் நம்பப்படுகிறது.

இது மனிதசிருஷ்டி மரத்தின் எல்லா கிளைகளின் விதைரூபமாக இருக்கும்  சிவனால் வெளிப்படுத்தப்படுகின்ற ஞானத்தில் அடங்கி இருக்கிறது என்பதை குறிக்கிறது.

shivshankar_madurai_bk

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP