நன்றி: சங்கமயுகம்
எல்லையில்லா இவ்வுலக நாடக மேடையில் நடைபெறும் மகாலீலையின் காட்சியை நாம் காண்கிறோம். நாடகத்தின் பாத்திரமான நடிகர்கள் அனைவரும் மேடையின் திரைச்சீலைக்குப் பின்புறம் ஏற்கனவே வந்து விட்டனர். மேடையில் யார் எப்பொழுது என்னவாக நடிக்க வேண்டும் என்பது முறைப்படி நடக்கிறது. தீர்மானிக்கப்பட்ட வேறு வேடத்தில் நடிப்பதற்கு தயார் செய்வதற்காக மீண்டும் திரைக்குப் பின் நடிகர் செல்கின்றார். ஆரம்பகால முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டு அநேகவித கரடு முரடான, மென்மையான அனுபவங்களை வாழ்க்கையில் சந்திக்கின்றனர். பழிக்குப்பழி, வஞ்சகம், ஏற்றம், இறக்கம், ஆக்கல், அழித்தல் ஆகியவற்றை அறியாமல் எத்தனை கதைகள், எத்தனை யாத்திரைகள் இவற்றின் நினைவில் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. சிருஷ்டி சக்கரத்தில் ஏற்படக்கூடிய இந்த மகாலீலையை நிர்ணயம் செய்கின்ற புள்ளி (மூலக்கர்த்தா) எங்கே? சாதாரண மக்களுக்கு இது பற்றிய விவரங்கள் எப்படி, எங்கே கிடைக்கக்கூடும்?
மனிதர்கள் தங்களுடைய மனவிருப்பங்களை எடுத்துக் கொண்டு புனித யாத்திரை செய்து பல தலங்களுக்குச் சென்று தீவிர முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் வல்லமைமிக்க விதி (பாக்கியம், அதிர்ஷ்டம்) குறுக்கே நிற்பது கண்களுக்குப் புலப்படுவதில்லை. மனிதர்கள் தீர்மானிக்கின்ற எண்ணங்கள், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேறு விதமாக விளைவு மாறுபடுகிறது. சில வேளைகளில் வெற்றிக்கான சூத்திரம் தன்வசம் உள்ளது எனத் தோன்றுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த சூத்திரம் கை நழுவி எங்கோ சென்று விட்டது. தற்போது தன்னிடம் உள்ளதோ இல்லையோ தெரியவில்லை, அப்போது மனிதன் முகம் சோர்வடைந்து, பொலிவிழந்து வேறு வழியின்றி ஒரு ஓரத்தில் தனிமையில் நின்று கொண்டு இருப்பதாகி விடுகிறது. மனித வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும், சந்திப்பு-பிரிவு, சாதகம்-பாதகம், இப்படி பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுடைய மனதில் எதிர்பாராது எழும் விரும்பத்தகாத காரியங்களைச் செய்ய ஒப்பவில்லை யெனினும் கூட ஏதாவதொன்று நடந்தேவிடுகிறது. கண் இமை முழுவதும் திறக்கவில்லை அதற்குள் கனவு முடிந்து விடுகிறது. பாவ காரியங்கள் செய்வதை விட்டு விட்டாலுமே கூட, ஒருவர் புண்ணிய காரியங்களை விரும்பி எவ்வளவு நன்மைகளை செய்கின்றாரோ என்பது இறுதியில் எவ்வளவு பாக்கியத்தை அடைகிறார் என்பதை ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக அனுபவம் ஏற்படும், அதை மறுக்க முடியாது.


