Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

உலகை மாற்றுவதற்கான பத்து வழிகள் !

Wednesday, 03 February 2016 / Published in Article – By Points

உலகை மாற்றுவதற்கான பத்து வழிகள் !

உலகில் தற்போது கவலையளிக்கும் நிலை என்பது எதனால் ஏற்பட்டுள்ளது ? அதற்கான காரணம் என்ன ?

மனிதர்களாகிய  நம்முடைய கடந்தகால செயல்களினால் ஏற்பட்ட பலனாகும். தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பம்  மற்றும் அரசியல் தீர்வுகளும் போதுமானதல்ல என நாம் உணர்கிறோம். இதுவே இதற்கு காரணம் ஆகும்.எப்போழுது நாம் நம்மோடும், மற்றவர்களோடும் இயற்க்கையோடும் உள்ள  உறவு முறையில் மாற்றம் கொண்டு வருகிறோமோ அப்பொழுது மட்டுமே  ”இந்த உலகம் மாறும் ”.

நாம் நம் மனதை மாற்றுவதன் மூலமும், உள்மனதோடு நம்மை திரும்பவும் இணைப்பதன் மூலமும் “மனித  இனமும்”, மற்ற உயிரினங்களும், அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழத்தக்க  ஒரு சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மிக அற்புதமான ஓர் உலகமாக  நம்மால்  மாற்ற முடியும்..

இந்த உலகத்தை ஓர் அற்புதமான உலகமாக மாற்ற நாம் இந்த பத்து (10) வழிமுறைகளை பின்பற்றினால் போதும்,

(1) எளிமையாய் வாழ்வோம்

எப்பொழுதும்  நாம் நம் மனம் மற்றும் உள் விருப்பங்களையும் ,உடலையும், உடல் சார்ந்த பொருட்களையும் பயன்படுத்துகிறோம். அப்பொழுது இவையனைத்தும் புத்திசாலிதனத்துடனும், கவனமாகவும் பயன்படுத்தும் போது இந்த பூமியை பாதுகாக்கும் பொறுப்பினை நாம் உணர்ந்து இப்புமியை நம்மால் பாதுகாத்திட முடியும்.என்ற நம்பிக்கை வருகிறது.”புத்திசாலித்தனம்”  என்பது இறைவன் கற்றுத்தருகின்ற இராஜயோக தியான பயிற்ச்சியின் மூலம் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கி அந்த விலை மதிக்க முடியாத, எண்ணங்களையும்,நேரத்தையும் ,பொருளையும் பயனுள்ளதாக ஆக்குவதன் மூலம் நல்லதொரு உலகை உருவாக்குவதில் நமது பங்கினை அளித்திடுவோம்.

(2) எல்லையற்றவர்களாக இருப்போம்.

நாம் ஆன்மீகத் தொடர்பினை இறைவனுடன் ஏற்படுத்தி அதன் மூலம் நமக்கு கிடைக்கின்ற ஆத்ம ஞானத்தினை பயன்படுத்தி செயற்கையின் பிரிவினைகளான

  • பாலினம்
  • கலாச்சாரம்
  • மதம் மற்றும் இனம்

இவையனைத்தையும் கடந்து செல்வோம். நாம் இந்த உலக சமுதாயத்தின் ஓர் பங்கு என நினைத்து உலக நன்மைக்காக செயல்படுவோம்,

10way_madurai_bk

(3) இதயத்தை (மனதை) திறப்போம்..

  • ஆறுதல்,
  • மன்னிப்பு
  • நிபந்தனையற்ற அன்பு

இந்த மூன்று   தனித்தன்மை நமக்கும் மற்றவர்களுக்கும்    கொடுக்கும் பொழுது இந்த உலகத்தை மீண்டும் சீரடையச் செய்ய உதவுவோம்.

(4) வாழ்க்கைக்கு மதிப்பளிப்போம்

நம்மிடம் உள்ள தனித்தன்மை என்பது நம்மிடம் உள்ள விசேஷத்தன்மையை  குறிக்கிறது.இந்த தனித்தன்மை மூலம் உலகில் உள்ள மற்ற விஷயங்களில் இருந்து விடுபட்டு அதில் ” அற்புதம்  ”, மற்றும் அடையாளம் கண்டு கொண்டு அதற்கேற்றார்  போல் நாம் நம்மையும் பிறரையும் அதேபோல் விலங்குகள் மற்றும் இயற்கையும் நாம் கரிசனத்தோடும் அக்கறையோடும் வழி நடத்த உதவுகிறது. இவ்வாறு நாம் நடந்து கொள்வதால் நமது வாழ்வு பிறர்க்கும் உதரணமாகவும் நன்மதிப்பு மிக்கவையாகவும் அதே வேளையில் பிரகாசமாகவும் ஒளிர்கின்றது.இதன் மூலம் உலக மாற்றதிற்கு நாமும் ஓர் அங்கமாகத் திகழ முடியும்.

(5) நற்சிந்தனைகள் உள்ளவர்களாக இருப்போம்.

Thinker_madurai_bk

நம்முடைய எதிர்மறையான சிந்தனைக்கும் தேவையற்ற எண்ணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். அவ்வாறு நாம் முற்று புள்ளி வைப்பதால் நேர்மறையான சிந்தனையின் சக்தியை தேர்ந்து எடுத்து உபயோகிப்பதும் உலக மாற்றதிற்கான ஓர் அடிப்படையாகும்.

அதாவது

எதிர் மறையான சிந்தனைகளும் தேவையற்ற எண்ணங்களும் குறையும்பொழுது நமது நேர்மறையான எண்ணங்கள் ஒருங்கிணைந்து ஒரு சக்தியாக மாறும்.

(6) சொல்வதை செய்வோம்

Say_madurai_bk

நாம் நம் எண்ணங்களை மதிப்பிட வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யும் பொழுது அது உண்மையாகவும் நம் மனதிற்க்கு விரோதம்  இல்லாமலும் இருந்து நேர்மையுடன் காரியங்களை செய்யும் பொழுது மற்றவர்களிடம் இருந்து தடை இருப்பினும் நம்முடைய செயல்கள் பலருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். நம் நல் எண்ணத்தோடு சொல்கின்ற ,செய்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் பிறருடைய மனதில் “பசுமரத்தானி போல் பதியும்”.

(7) தன்மீது தானே ராஜ்யம் செய்வோம்

Mind_madurai_bk

நாம் தான் நம் புதிய உலகை உருவாக்கும் “”மாஸ்டர் படைப்பாளர்கள்”” மேலும் நம் வாழ்வில் ஏற்படும் சவால்களை எப்படி நாம் எதிர்கொள்வது என்ற சக்தியினையும் மேலும் வாழ்வின் சுதந்திரத்தினையும் பொறுப்பினையும் பெற்று உள்ளோம். இவ்வாறு தன் மீது தானே ராஜ்யம் செய்வதன் மூலம் நம்பிக்கையும் தைரியமும் ஏற்படுகிறது. தன் மீது தானே இராஜ்யம் செய்பவர்கள் உலகின் மீது ராஜ்யம் செய்யலாம்.

(8) அன்னம் எப்படியோ அப்படியே நம் எண்ணம்

stay-positive2_madurai_bk

உணவு சமைக்கும் பொழுது எப்படிப்பட்ட மன நிலையில் இருந்து சமைக்கின்றோமோ அந்த எண்ணங்களின் சக்தி அந்த உணவில் சென்று படிகிறது.

உதாரணம்:

மரண வீட்டில் உணவு சாப்பிட்டால் துக்கத்தின் பிரபாவமும், திருமண வீட்டில் மகிழ்ச்சியின் பிரபாவமும் இருக்கும். இதற்கு காரணம் என்னவெனில் இங்கு இருப்பவர்களின் மனநிலையே காரணம் ஆகும்.எனவே நாம் நம் வீட்டில் சமைக்கின்ற பொழுது இறைவனின் நினைவில் நல் எண்ணங்களின் ஆதரத்தில் மிகவும் அன்பாகவும் சாத்வீக உணவவை சமைத்து அதை இறைவனுக்கு படைத்துவிட்டு இறை நினைவில் சாப்பிடும் பொழுது அந்த உணவு நமக்கு மிகவும் சக்தியை கொடுக்கிறது.

(9) கனவினை நனவாக்குவோம்

Achievement_madurai_bk

நம் எண்ணங்களுக்கு அளப்பெறிய சக்தி உள்ளது. எனவே இந்த எண்ணங்களின் சக்தியினால் இவ்வுலகில் சாதிக்க இயலாதது ஒன்றுமே இல்லை. பொதுவாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.”” எண்ணம் போல் வாழ்வு ” ஒரு மனிதனின் வாழ்வு என்பது அந்த மனிதனின் மனதில் வரும் எண்ணங்களின் அடிப்படியில் தான் அந்த மனிதனின் வாழ்க்கை உள்ளது. எனவே நம்மிடம் உள்ள விலை மதிக்க முடியாத எண்ணங்களின் சக்தியை ஆக்கபூர்வமான வழியில் சிந்தித்து ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே ராஜ்யம், ஒரே மொழியினையுடைய உலகமாகிய கணவுலகை மெய்யாக்கிடுவோம்.

(10) ஆத்மாவிற்க்கு  ஊட்டம் அளிப்போம்

tree_madurai_bk

அமைதியின் அனுபவத்தை பெறுவதற்காக  தன் நேரத்தை பிரார்த்தனையில் அல்லது தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். இந்த தியானத்தின் மூலம் தன் வாழ்வில் ஆத்ம பலத்தையும் நேர்மறையான எண்ணங்களின் சக்தியையும் அதிகரிக்கும். உடலுக்கு உணவு எப்படி அவசியமோ அது போல் ஆத்மாவிற்க்கு நல்எண்ணங்கள் என்ற உணவு மிக மிக அவசியம். உடலிற்க்கு சக்தியை பெற வேண்டும் என்பதற்காக  பார்த்து பார்த்து சாப்பிடுகிறோமோ அதே போல் ஆத்மா சக்திசாலியாக இறைவனால் ஊட்டப்படுகின்ற நல் எண்ணங்கள் என்ற உணவினை அருந்தி ஆத்மாவை சக்திசாலி ஆகிடுவோம்.

மேற்கண்ட அற்புதமான விஷயங்களை நம் வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் நாமும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் சுபிட்சமாகவும் வாழலாம். “தனிமனித வாழ்வின் மாற்றமே இவ்வுலக மாற்றத்திற்க்கு ஆதாரமாகும்.

எனவே மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வில் வெற்றிபெற்று, அனைவரையும் வெற்றியடைய செய்வோம் !

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP