Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

தூய்மை

Tuesday, 12 January 2016 / Published in Article – List

தூய்மை

நன்றி: The World Renewal, Magazine

நமது இந்தியா ஒரு காலத்தில் உண்மை மற்றும் மகிழ்ச்சியின் இருப்பிடமாக இருந்தது.தங்கச் சிட்டுக் குருவியாக இருந்த நம் பாரதம்,  இப்பொழுது துயரத்தின் இருப்பிடமாக மாறி விட்டது. இந்தத்துயரத்திற்க்குக் காரணம், நாம், நம்சுய நினைவுகளை இழந்து ”காமம், கோபம், பொறாமை, மற்றும் பேராசை” என்னும் வலையில் சிக்கியதே  ஆகும். அப்படி இந்த துக்கம் நிறைந்த இந்த பூமியை “சொர்க்க பூமியாக”  மாற்றுவதற்க்காத்தான் நமது “ஞானக்கடல்”, “பரம தந்தை,பரமாத்மா” நம்மை  மாற்றி,  ஓர் உன்னதமான உலகத்தை உருவாக்கி, நம்மை அவ்வுலகில் ராஜ்யம் செய்வதற்க்கு தகுதி உடையவராக ஆக்குகின்றார். இதுவே நாம் நமது எண்ணங்க்களைத் தெய்வீகமானதாக்கி தூய்மையாகுவதற்கான மிகச் சரியான நேரமாகும்.

இன்றைய காலக்கட்டத்தின் நிலை

இன்று, ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் குழப்பமான  சூழ்நிலையில் மிகவும் துன்பப்படுகிறார்கள் .இதற்குக் காரணம் என்ன?

swan4_madurai

நிச்சயமாக இதற்கு பதில்

1.தெய்வீகத்தன்மை

2.தூய்மை

இவற்றை இழந்தது தான் காரணம் தூய்மையை இழந்ததே, நம் வீழ்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணம். நாம் இழந்த தூய்மையை திரும்பப் பெருவதற்கு மிக உயர்ந்த ஆன்மிக அறிவே உதவி புரியும். என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். அந்த ஆன்மிக அறிவே தூய்மைக்கு வித்தாகும்.  நம்முடைய ஆன்மிக அறிவு  நாம் நமக்குள்  ஆழ்ந்து செல்வதற்க்கும் உண்மையை உணர்த்துவத்ற்க்கும் உதவுகிறது. நாம் முன்பு எவ்வாறு ”சக்தி வாய்ந்தவராகவும்” ,  ”உண்மை வாய்ந்தவராகவும்” ,”தெய்வீகத்தன்மை வாய்ந்தவராகவும்” இருந்தோம் என்பதை  உணர்த்துகிறது. நம்முடைய அகத்தூய்மையானது இயற்கையின் அழகைப்  பிரதிபலிக்கிறது.

தூய்மை என்பது வெள்ளை உடை அணிந்து கொண்டாடுவதில் இல்லை. இது, பல பரிமாணங்களைக் கொண்டது. தூய்மை என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சியின் தாய்.  நம் தந்தை பரமாத்மா சிவன், அறிவின் பொக்கிஷங்களையும், நல்ல குணங்களையும், சக்தியையும் நிறைத்துத் தருகிறார். யார் இதை அனுபவம் செய்கிறார்களோ, அவர்களுடைய ஆத்மா   பட்டை தீட்டிய  மதிப்பு வாய்ந்த வைரமாக மாறும்.

Mateshwari ji_madurai

நாம் நம் தந்தையிடம் உண்மையாக முழுமனதார  நம்பிக்கை வைக்க வேண்டும். அறிவுக் கடலான தந்தையிடம் தொடர்பு வைப்பதால், ஆத்மா அப்பழுக்கற்ற அனுபவத்தை அடைகிறது. அப்பழுக்கற்ற  இதயம்  எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். தூய்மை மற்றும் அமைதியான ஆத்மா, – ”தெய்வீகத்தன்மையை” – அடையலாம். எனவே, முன்னேறும் கலையினால், பழைய  உலகத்திலிருந்தும் பழைய எண்ணங்களிலிருந்தும் விடுப்பட்டு உயர்ந்த தெய்வீக உலகத்திற்குச்  சென்றுவிடலாம். எப்பொழுதும் ஆத்ம உணர்வில் இருந்தால், நம்முடைய ”அதிர்வலைகள்” தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மையாக்கும். அழுக்கான ஆத்மா தூய்மையான ஆத்மாவாக மாறிவிடும்.  ”தேவ ஆத்மா”- ஜெகதாம்பாள் சரஸ்வதி {மம்மா} அவர்கள் தேவதா தன்மையுடன் இருந்ததற்குக் காரணம், ”பரிசுத்த ஒளியின்” அனுபவத்தின் மூலமாக, ”எதிர்மறை எண்ணங்களை” விடுத்து, எப்பொழுதும் ”தூய்மையின் அனுபவத்தை” மற்றவர்களுக்கும்  ஏற்ப்படுத்திக்கொண்டே இருந்ததுதான்.

பரம்பொருள் சிவத்தந்தையின் குணங்களில் ஒன்றான தூய்மை நம்மை தேவையற்ற விஷயங்களிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் விடுவிக்கும். தூய்மையில்லா எண்ணங்கள் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்கும். நம்மை உன்னதமான தூய்மையான ஆத்மாவாக மாற்றுவதற்காகத் தான் நம்முடைய தந்தை நமக்கு ஞானத்தைக் கற்றுத் தருகிறார். தூய்மையான ஆத்மாவாக மாறிக் கொண்டிருக்கும். நம்முடைய  கடமை என்னவென்றால், தூய்மைக் கடல் சிவத்தந்தையின் அறிவுரைகளின்படி நடப்பதாகும். தந்தையின் அறிவுரைகளை,  சந்தோஷமாகக் கடைபிடிக்கவும் வேண்டும். இறை தந்தையின் அறிவுரையானது மிகவும் தனித்தன்மையானது. முதலில் நாம் நம் தெய்வீகத் தன்மையான தூய்மையை அனுபவம் செய்தால் தான், மற்றவர்களுக்கும் அனுபவம் கொடுக்கக்கூடிய பரமதந்தையின்   உதவியாளராக ஆக முடியும். எனவே, நாம் எளிமையான தூய ஆத்மாவாக ஆக முயற்சி செய்து எப்பொழுதும் இறைவனின் நினைவில் இருக்கக் கூடிய ”தேவதா ஆத்மாவாக”  மாறுவோமாக!!!.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP