Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

நேரம்

Wednesday, 09 December 2015 / Published in Article – List

நேரம்

நேரத்தை  உருவாக்குவதில் நீங்கள் எஜமானரா ?

நாம் எப்பொழுதெல்லாம் வாழ்க்கையை ஆழ்ந்து சிந்திக்கின்றோமோ அப்போழுது நேரம் என்பதை விட புரியாத புதிர் எதுவும்  இல்லை. நம்மால் நேரத்தை பிடித்து வைக்கவோ, நிறுத்தவோ, சேமிக்கவோ,அல்லது இழக்கவோ முடியாது. ஏனெனில் நேரம் என்பது ஒரு பொருள் அல்ல.அது ஒரு ஆதாரமும் அல்ல.ஆனால் நாம் நேரத்தை ஒன்று திரட்டி,சேமித்து வைத்து செலவலிக்க கூடிய ஒரு பொருளாக, ஆதாரமாக நாம் நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் செய்கின்றோம். மூன்று விதமான மாயைகளால் இந்த உலகத்தில் வழிநடத்தப்படுகிறோம்.

  • நேரம் என்பது மிக விரைவாக ஓடிவிடும்.
  • நாம் விரைவாக செயல்பட்டால் நேரத்தை சேமிக்கலாம்.
  • நாம் காத்திருந்தால் அதிகமான நேரம் கிடைக்கும் பின்னால்…

bk_madurai_time-and-place-

சில நாட்கள் நாம் மற்ற மனிதர்களின் முகத்தை பார்ப்பதை விட அடிக்கடி கடிகாரத்தின் முகத்தை பார்க்கிறோம். நேரத்திற்க்காக நாம் தள்ளப்படுவதையும்,பின்னர் மூச்சுவிடக்கூட நேரமில்லாமலும், வேகமாக நாம் செயல்களை செய்து முடிப்பத்ற்க்காக, அத்ற்க்காக  ஓடுவதை பற்றியும் பேசுகிறோம். நேரத்தை எங்கே சென்று தேடுவது என்றும் தெரியவில்லையே என புலம்புகிறோம். ஆனால் நேரம் என்பது கண்டுபிடிக்கப்படுவது அல்ல.அது உருவாக்கப்பட்டது…

    நேரம் என்பது உணர்ந்து அறியும் சக்தி.

மிக துல்லியமாக கூற வேண்டும்மேனில் நேரம் என்பது நிகழ்வுகளின் இடைவெளிக்கும் அல்லது
நிகழ்வுகளின் தொடக்கம் மற்றும் முடிவுகளின் இடைவெளிக்கும் இடையேயான உங்களின் உணரும்  சக்தி ஆகும்.
நாமே நேரத்தை உருவாக்குபவர்கள்.ஏனெனில் நாம் தான் நம் உணர்ச்சிகளை உருவாக்குபவர்கள். கடந்து போகும் நேரத்தை பற்றிய விழிப்புணர்வு இயற்க்கையானது.சொந்த அனுபவமானது.

எவ்வாறு கித்தான் துணியானது சித்திரத்தை தாங்கி நிற்க்கிறதோ, அதே போல் வாழ்க்கை பயணம் என்கின்ற சித்திரத்தை   தாங்கி நிற்க்கும் கித்தான்  துணியாக நேரம் விளங்குகிறது.

ஏன், நம்மில் பலர் பைத்தியகாரதனமாக நேரத்தை உருவாக்கும்  வாழ்க்கை முறையை ஒட்டுகிறார்கள்,.எவ்வாறு  நம்மில் சிலர்  { நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும்.} நேரத்திற்க்கு   அடிமையாக காணப்படுகிறார்கள். நேரம் ஓடிவிடும் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் நாளைக்கு அதிகமான நேரம் இருக்கும் என்றெல்லாம், ஏன் நாம் தவறாக நம்ப ஆரம்பித்துவிட்டோம்…

நேரம் இரகசியமானது.

ஒரு காலத்தில் ஒரு இளமையான மற்றும் அறிவுடைய தச்சு வேலை செய்பவர் இருந்தார். ஒரு நாள் அவர் மிக அழகான பெட்டி ஒன்று செய்தார். அந்த பெட்டியின் மேல் வர்ணம் அடித்து அதற்க்கு அழகான முகம் வைத்து இரண்டு நேர்த்தியான கைகளையும் வைத்தார். அன்று இரவு கிட்டதட்ட சரியான இரவு நேரத்தில் அவர் காட்டிற்க்கு சென்றார். நீ அந்த பெட்டிக்குள்  சென்றால் நான் உறுதி அளிக்கின்றேன், உன்னால் கிட்டத்தட்ட இந்த பூமியில் உள்ள எல்லா மனிதர்களையும் உன் வசப்படுத்த முடியும். சிறிது தயக்கத்திற்க்கு பிறகு நேரமானது சந்தேகத்தோடு பதில் அளித்தது. நீ சொல்வதெல்லாம் உண்மையாகவா?. அதை கேட்ட தச்சர் பதில் முற்றிலும் நிச்சயமானது. ஏனென்றால் அவர்கள் நினைக்கிறார்கள் ….அவர்கள் தான் உன்னை கட்டுப்படுத்துவதாக (வசப்படுத்துவதாக). ஆனால் நீ தான் அவர்களை வசப்படுத்துகிறாய். அதற்க்கு நான் உத்திரவாதம். மேலும் நேரம் அதற்க்கு ஒத்துகிக்கொண்டு பெட்டிக்குள் சென்றது. அந்த தச்சர் மலையிலிருந்து வீட்டிற்க்கு திரும்பினார். அந்த பெட்டியினை நடுவில் உள்ள உயர்ந்த அலமாரியில் வைத்தான். அவன் அந்த பெட்டியினை “கடிகாராம்” என்று அழைத்தான்.Bk_madurai_Conscious-Leadership

மிக குறுகிய நாட்களிலேயே அது தவறாக நேரம் என்றானது. மேலும் அனைவரும் அந்த கடிகாரத்தின் முகத்தை வாழ்க்கையின் வழிகாட்டியாக பார்த்தனர். ஒவ்வொரு முறையும் நாம் நேரத்தை பற்றி நினைக்கும் போது நாம் எங்கேயோ ஓர் இடத்தில் கடிகாரத்தை பார்க்க முனைகிறோம். அந்த கடிகார நேரத்தை சுற்றி நாம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி நம் ஒவ்வொரு அசைவையும் அதன் முட்களுக்கு  ஒத்துப்போய் வாழ்கிறோம்.நாம் ஒரு இயந்திரத்தை பார்க்கிறோம், குறிப்பிடுகிறோம் என எப்போழுதும் நாம் உணர்வதில்லை. காலத்தை பற்றிய  ஒரு தவறான கருத்தை நாம் உருவாக்கிகிறோம் என்ற விழிப்புணர்வு நமக்கு இல்லை.கடிகார நேரம் உண்மையான நேரம் அல்லது அது நம் உணர்வின் இடைவெளிக்கும் நிகழ்வுகள் நடப்பதற்க்கான இடைவெளிக்கும், இடையே அளப்பதற்க்கான ஒரு வழிமுறை. விநாடி ,நிமிடம்,மற்றும் மணி நேரத்தை நம்முடைய அளக்கும் அளவாக புதிதாக உருவாக்குகிறோம். நேரம் என்பது உணர்வு என்பதை நம்மில் பலர் “கடிகார உணர்வாகத்” தான் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. கடிகாரத்தை நம்முடைய முதல் இயந்திரமாகத் தான் நாம் புதிதாக கண்டுபிடித்து உருவாக்கி இருக்கிறோம். இன்று நம்மில் பலர் நாம் கண்டுபிடித்தவருக்கே அடிமைகளாகி இருக்கிறார்கள்.

உண்மையான நேரம் என்பது என்ன

நம் உள்ளுணர்வில் பதிவான நிகழ்வுகளால் தூண்டப்பட்டு “அது வெளி உலகின் நிகழ்வுகளாக”வெளிப்படுகின்றன.இன்பத்திற்க்காக திரும்ப திரும்ப நடக்கும் எந்த ஒரு தூண்டுதளும் பின்னர் படிப்படியாக நம்மை அடிமையாக்கி விடும். அதற்க்கு போதைக்கு அடிமையானவனே சான்று. தூண்டுதல் தீயவழிக்கு நம்மை அடிமை ஆக்கும் போதுஅதே மாதிரியான பெற படிப்படியாக அதிக தூண்டுதல் தேவைப்படுகிறது.

நம்மில் பலர் பகிர்ந்து கொள்ளும் முதன்மையான தீயபழக்கம் என்னவென்றால் வெளி உலகில் நிகழ்வுகளின் மூலம் கிடைக்க பெரும் உள்ளுணர்வின் தூண்டுதல் தான். அந்த வெளி உலக நிகழ்வுகள்  மற்ற மனிதர்களாகவோ சினிமா, பணி சாதனைகளின் மூலம் பெறப்பட்ட தகவல் மற்றும் பிம்பங்கள் மற்றும் பல விஷயங்களாகவோ இருக்கலாம். அது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். படிப்படியாக சிலர் அல்லது நம்மில் பலர் நிகழ்ச்ச்சியின் தூண்டுதலை கூட்ட முயற்சி செய்வர்.  எனவே வேகமான வாழ்க்கை முறை மற்றும் வேகத்துடன் கூடிய ஒட்டுமொத்தமாக தன்னை மறந்த நிலை ஆகியவைக்காக வளரும் நிலை உருவாகிறது. நாம் வேகத்திற்க்கு அடிமையாகிறோம் அது அதிகமான நிகழ்வுகளின் தூண்டுதளுக்கு அடிமை மற்றும் வாழ்க்கையின் வேகத்தை அதிகரிப்பது  என்பது நிகழ்வுகளின் இடைவெளியை மூடுவது ஆகும்.

தகவல் தொழில் நுட்பத்துடனான  நம்முடைய உறவு இதற்க்கு எடுத்து காட்டு. உங்களுடைய கணினி செயல்படாமல் நின்று விட்டால் கவனியுங்கள். சில தருணங்களில் உங்களுடைய பற்க்களை கடிப்பீர்கள்அல்லவா? எரிச்சல் அல்லது ஏமாற்றம் ஆகிய உணர்ச்சிகளை உருவாக்குகிறீர்கள். ஒருவேளை கோபம் கூட வரலாம் அதுமாதிரி அடிக்கடி நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்கள் என்பது தானே பொருள். ஏனெனில் இயந்திரத்தில் உள்ள திரை மூலமாக நீங்கள் எதிர்ப்பார்த்து, சார்ந்து இருந்த நிகழ்வுகளின் தூண்டுதல்கள் உங்களுக்கு கிடைக்காததால் தன் புதிய மாடல் கைபேசி அல்லது மடிக்கணினி துரிதமாக இல்லை மற்றும் நிறைய நிகழ்வுகள் கொடுக்கவில்லை,மேலும் வேகமாக இயங்கவில்லை எனில் நாம் கொடுத்த பணத்திற்க்கு மதிப்புள்ளதாக இல்லை என எண்ணுவோமல்லவா?

வாழ்க்கையின் இலக்கணம்.

இப்போது இங்கேதான் ஆர்வம் வருகிறது. நல்ல வாழ்க்கையின் அடிப்படை குணம் என்பது நிறுத்தர்குறிகள். அதுபோல வாழ்க்கைக் காலம் என்ற நீண்ட முடிவில்லாத வாக்கியத்தின் நிறுத்தர்குறிகள் என்பது நிகழ்வுகள் ஆகும் வாக்கியத்தின் சரியான இடத்தில் வைக்கப்படும் நிறுத்தர்குறிகள்  வார்த்தையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் அதே போல் நம் வாழ்க்கையை  அர்த்தமுள்ளதாக ஆக்குகிற வாழ்க்கை நிகல்வுகளின் நிருத்தர்குறிகளுக்கு இடையேயான இடைவெளியின் அளவாக அவை உள்ளன.

ஆழ்ந்த அர்த்தத்தை தருவது என்பது உண்மையான நிகழ்வு அல்ல. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்க்கு நேரத்தை உருவாக்குவதற்க்காண மற்றும் நிகழ்வுகளுக்கு இடையேயான இடைவெளி ஆகும்.

bk_madurai_clock_spiral

நாம் எடுத்துக்கொள்ளும் அல்லது கூர்ந்து ஆராயும், போதும் புரிந்து  கொள்ளும், கிளர்ச்சியூட்டும்  மற்றும் நம் சொந்த தனிப்பட்ட முக்கியத்துவம் உருவாக்குகின்ற இடைவெளி அல்லது நேரத்தில் உள்ளது. இது பிரதிபலிக்கும் மற்றும் ஆழ்ந்து புரிந்து கொள்ளும் முறை மூலம் நடக்கிறது. இந்த உருவாக்கப்பட்டதும், அர்த்தமானதும் பல நுட்பமான உணர்ச்சிகளை மேல் எழுப்பி பின்னர் அது நம் எதிர் காலம் என அலைக்கப்படுகிறது. எவ்வாறு நம்முடைய கவனம் மற்றும் சக்தியை பயன்படுத்தலாம் என்பது நமது முடிவெடுக்கும் முறையை தெரிவிக்கிறது. ஆனால் நீங்கள் நிகழ்வுகளின் தூண்டுதளுக்கு அடிமையாகும் போது நீங்கள் எப்போதும் நிகழ்வுகளின் அலைவரிசையை பார்க்கிறீர்கள்.(அதாவது உங்கள் உள் உணர்வின் அதிக அளவு நிகழ்வுகளை திணிக்க முற்படுகிறீர்கள்.) பின்னர் உங்கள் அர்த்தமுள்ள படைப்பில் உள்ள நிகழ்வுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்காதீர்கள். அந்த நிகழ்வின் சிலிர்ப்பில் மட்டுமே சுறுசுருப்படைந்து விடுகிறீர்கள். இது வாழ்க்கையின் தளத்தில்… போட்டியிடும் மனப்பான்மை… திருப்தியற்ற வாழ்க்கை… ஆகியவைக்கு வழிசெய்கிறது. திருப்தியான மற்றும் நிறைவான வாழ்க்கை தன்மை குறைய இது வழி செய்கிறது. அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்க அக்கறையோடு கவனிக்க பிரதிபலிக்க! ஆழ்ந்து சிந்திக்க, உள்ளுணர்வில் உள்ளார்ந்த இடைவெளியில் நாம் நேரத்தை உருவாக்க வேண்டும். எனவேதான் சரியான அர்த்தத்தோடு நீங்கள் உருவாக்கும் எந்த ஒரு நிகழ்வும் உங்களுக்கு தனிப்பட்டதாக இருக்கும்.

இதன் சாராம்சம் என்னவெனில்!

வாழ்க்கையின் அர்த்தத்தை தருவது அதன் நிகழ்வுகள் அல்ல. அந்த நிகழ்வுகளின் போது உங்கள் உள் உணர்வில் அந்த நிகழ்வுகளோடு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான்.  உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை தருகிறது.  எந்த அளவுக்கு  நிகழ்வுகளின் தூண்டுதளுக்கு அடிமை ஆகுகிறீர்களோ அந்த அளவு வாழ்க்கையின் அர்த்தத்தை உருவாக்கும். உள்ளார்ந்த இடைவெளியில் குறைவு உள்ளவர்கள் ஆகுகிறீர்கள். அது நீங்கள் உங்கள் வாக்கியத்தில் நிறுத்தர் குறிகள் இடாதது வாக்கியத்தை எந்த அளவுக்கு அர்த்தமற்றதாக அக்குமோ, அது போல அர்த்தமற்றதாக்கி விடும்.bk_madurai_main_what_is_consciousness

இன்று நாம் காணும் வாழ்க்கையின் பல பகுதிகள் ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளில் பிரதிபலிக்கிறது. நவீன சமுதாயத்தின் பல பகுதிகளில் இதனால் ஆழத்தின் குறைபாடு ஏற்ப்படுகிறது .இதன் விளைவு பல மனித உயிர்கள் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள்!!!

அவர்கள் ஏற்க்கனவே துரிதப்படுத்தபட்ட நிகழ்வுகள் நிறைந்த உலகிற்க்கு வந்து விட்டார்கள். எனவே மக்கள் தொகை வெடிப்பு ஏற்ப்படுகிறது மற்றும் மக்கள்  {ADD}  என்ற குறைப்பட்டினால் தாக்கப்படுகிறார்கள்.

A-ATTENTION (கவனம்)

D-DEFICIT- (குறைவு)

D-DISORDER- (ஒழுங்கின்மை)

ADD என்பது அவர்கள் அமைதியாக இருக்க பிரதிபலிக்க,ஆழ்ந்து சிந்திக்க, உருவாக்க  இயலாத நிலமை மற்றும் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதிலிருந்து அர்த்தமுள்ள சான்றை எடுத்து தர முடியாத நிலைமையை குறிக்கிறது.

உள்ளுணர்வு,நேரம், அர்த்தமுள்ள தன்மை இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP